மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி..!! கோல்மாலுக்கு தயார் ஆகும் நடிகர்கள்..!

கலகலப்பு -2 வில் இணைந்து நடித்திருந்த ஜீவா - மெர்ச்சி சிவா கூட்டணி கோல்மால் படத்தில் நடிக்க இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் படம் குறித்த தகவல்களைக் காணலாம்...

2018 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆனா கலகலப்பு -2 படத்தில் ஜெய், ஜீவா, சிவா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா - மெர்ச்சி சிவா கூட்டணி புதிதாக கோல்மால் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் தொடர்பான டைட்டில் போஸ்டார் வெளியாகியுள்ளது. ஜீவா - சிவா கமெடியில் கலக்குவார்கள் என்பதால் இந்த படத்தில் கமெடிக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது. இந்த படத்தில் நாயகிகளாக பயல்ராஜ்புத், தன்யா ஹோப் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

மேலும், கன்னட இயக்குனர் பொன்குமரன் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. ஜாக்குவார் ஸ்டூடியோ நிறுவனத்தின் பி வினோத் ஜெயின் என்பவரின் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது.

 

Related Articles

Next Story