எந்த படமும் ஓடல!…தொழிலை மாற்றும் ஜீவா…இதாவது தேறுமா?

நடிகர் ஜீவா, பிரபல தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியின் இளைய மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழில் “ஆசை ஆசையாய்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிய ஜீவா, “ராம்” திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

அதன் பின் “ஈ”,”கற்றது தமிழ்”, “கோ” என வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்தார். இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த ஜீவாவின் கேரியர் திடீரென சருக்கியது.

ஜீவா, மிஷ்கின் இயக்கத்தில் “முகமூடி” என்ற திரைப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்தார். தமிழின் முதல் சூப்பர் ஹீரோ என்ற பெயரையும் ஜீவாவுக்கு அத்திரைப்படம் கொடுத்தது. ஆனால் அங்கு தான் வினையே ஆரம்பித்தது. ஜீவா நடித்த “முகமூடி” திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

அதன் பின் “டேவிட்”, “திருநாள்”, “கீ”, “கொரில்லா” “ஜிப்ஸி” என என்னென்னமோ செய்து பார்த்தார். எந்த திரைப்படமும் கைக்கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து “83” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். ஹிந்தியில் நடித்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது. தற்போது “காஃபி வித் காதல்”, “வரலாறு முக்கியம்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பெரும் சருக்கல்களை கண்டு வந்த ஜீவா, தற்போது ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளாராம். அதாவது தனது தந்தையை போலவே ஜீவாவும் ஒரு தயாரித்து நிறுவனத்தை தொடங்க உள்ளாராம். சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு அலுவலகத்தையும் அமைத்துள்ளாராம்.

இதில் பல இளைஞர்களை வேலைக்கு சேர்த்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்க வைத்து, அதனை திரைப்படமாக எடுப்பதற்காக திட்டமிட்டுள்ளாராம். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “சூப்பர் பாக்ஸ்” என்று பெயர் வைத்துள்ளாராம் ஜீவா. இவ்வாறு பல தகவல்கள் வருகின்றன.

நடிகர் ஜீவாவுக்கு சமீபத்தில் வந்த எந்த திரைப்படமும் கைக்கொடுக்காத நிலையில் தற்போது தனது தந்தையை போலவே தயாரிப்பாளர் ஆக உள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனமாவது பிக் அப் எடுக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Articles
Next Story
Share it