தினமும் பெயின் கில்லர் ஊசி.. இதெல்லாம் யாரும் கண்டுக்கலயா? ‘ஜோடி ஆர் யூ ரெடி’யில் நடந்தது என்ன?

by Rohini |   ( Updated:2025-04-25 08:25:38  )
jodi
X

jodi

Jodi Are You Ready: விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரைக்கும் ஏதாவது ஒரு வகையில் புதுப்புது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை ஊக்குவிப்பதே அந்த தொலைக்காட்சியின் முக்கிய நோக்கம். அந்த வகையில் இரண்டு சீசன்களாக மக்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி ஜோடி ஆர் யூ ரெடி. இதில் நடுவர்களாக ரம்பா, ஸ்ரீதேவி ,சாண்டி மாஸ்டர் ஆகியோர் இருந்து வருகின்றனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ரியோ மற்றும் ஏஞ்சலின். இந்த நிகழ்ச்சியை பற்றி அந்த ஷோவில் கொரியோகிராபராக இருந்து வரும் சூர்யா மாஸ்டர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதோ அவர் கூறிய சில தகவல்கள். சீசன் இரண்டை விட சீசன் ஒன்றுதான் பெஸ்டாக இருந்தது. ஆனால் இரண்டு சீசன்களிலும் என்னுடைய பேட்டன் இல்லாமல் எனக்கு போட்டியாளர்களாக வந்தவர்களுக்கு ஏற்ப அவர்களுடைய பேட்டனுக்கு நான் மாற வேண்டியதாக இருந்தது என்று சூர்யா மாஸ்டர் கூறினார். இவருக்கு கீழ் போட்டியாளர்களாக வந்தவர்கள் ஹாஜிரா- சஞ்சய், மணிகண்டன் -ஹர்ஷதா.

இதில் இந்த இரண்டு ஜோடிகளுமே என்னுடைய பேட்டன் கிடையாது .அதனால் அவர்கள் பேட்டனில் இறங்கி அவர்களுக்கு ஏற்ற மாதிரி நான் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய எக்ஸ்பீரியன்ஸ் ஆக இருந்தது என்று கூறினார். ஆனால் இரண்டு பேருமே இப்போது நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆகி விட்டார்கள். இதனால் சூர்யா மாஸ்டரும் நிகழ்ச்சியில் தொடர முடியாத நிலை.

ஆனால் சூர்யா மாஸ்டர் அவ்வப்போது மற்ற போட்டியாளர்களுக்கு அவரால் முடிந்த அளவு உதவி செய்து கொண்டு வருகிறார். ஆனால் அந்த இரண்டு ஜோடிகள் போனதற்கு என்ன காரணம் என்பதை பற்றி சூர்யா மாஸ்டர் கூறியிருக்கிறார். அதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே டிஸ்க் பிரச்சனை இருந்ததாம். அதனால் மணிகண்டனால் முழுவதுமாக நடனத்தில் ஈடு கொடுத்து ஆட முடியாது. அதுதான் முக்கிய காரணம் .அவர் உடல் ரீதியாகவே கொஞ்சம் வலுவிழந்து போய் தான் இருந்தார்.

நீண்ட நாளாகவே அவருக்கு அந்த டிஸ்க் பிரச்சினை இருந்ததாம். அப்போதிலிருந்தே ரிகர்சல் ஆகட்டும், தினமும் பிராக்டீஸ் ஆகட்டும், ஷூட் நேரமாகட்டும். எப்பொழுதுமே பெயின் கில்லர் ஊசி எடுத்துக்கொண்டு தான் வருவாராம். அது தினமும் அதிகரிக்க அதிகரிக்க மருத்துவர்களை இவர்களை திட்ட ஆரம்பித்து விட்டார்களாம். அந்த அளவுக்கு தினமும் பெயின் கில்லர் எடுக்கக் கூடாது .

அதனால் மணிகண்டன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. ஆனால் சூர்யா மாஸ்டர் மற்றும் உள்ளே இருக்கும் டெக்னீசியன்கள் எவ்வளவோ சொல்லியும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் மணிகண்டன் தமிழ்நாட்டில் வந்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் ,என்னை தமிழ்நாட்டு ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம். ஆனால் அவர் முடிந்த அளவு உழைப்பை போட்டும் அவரால் முடியவில்லை என சூர்யா மாஸ்டர் கூறியிருக்கிறார்.

Next Story