சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் இவர் தானா?.. டாப் 2 இடத்தை பிடித்த பெண் போட்டியாளர்கள்!..

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே ரசிகர்களை கவரும் விதமாக மட்டுமின்றி அதிகப்படியாக மக்களை மேடையேற்றி அழகு பார்க்கும் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் என அனைத்துமே மக்கள் ஓட்டுப் போட்டு வெற்றியாளரை தேர்வு செய்யும் விதமே உருவாக்கப்பட்டுள்ளதால் ஏகப்பட்ட பார்வையாளர்கள் விஜய் டிவியின் ஃபேனாக உள்ளனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெற்று வரும் நிலையில், 10வது சீசன் கிராண்ட் ஃபினாலே இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. பிரியங்கா மற்றும் மாகாபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், மனோ, அனுராதா ஸ்ரீராம், சுஜாதா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த நிலையில், கிராண்ட் ஃபினாலேவில் சூப்பராக பாடி வந்த ரசிகர்களை ஹேப்பி ஆக்கினர்.

சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னராக ஜான் ஜெரோம் வெற்றிப் பெற்றார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு முதல் பரிசாக வழங்கப்பட்டது. ரன்னர் அப்பாக வைஷ்ணவி தேர்வான நிலையில், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜய் அப்படி நடிச்சதே மோசமான விஷயம்!… படம் ஒரு ஆணியும் புடுங்கப்போறது இல்ல… விளாசும் பிரபலம்

2வது ரன்னர் அப்பாக ஜீவிதா தேர்வானார். அவருக்கு 5 லட்சம் பரிசும் 4வது மற்றும் 5வது இடங்களில் வெற்றியை நழுவ விட்ட போட்டியாளர்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் பரிசுகளை வழங்கி அவர்களையும் ஆனந்தமாக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

 

Related Articles

Next Story