கமலிடம் தினமும் ‘ஐ லவ் யூ’ சொன்ன நடிகர்!.. பாத்து புரோ கமல் லிப்லாக் அடிச்சிடுவாரு!…

by சிவா |   ( Updated:2025-04-18 02:47:31  )
kamal
X

Thug life kamal: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார் கமல். சிறு வயதிலேயே மிகவும் அழகாக இருப்பார். 80களில் அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கியபோது அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் உருவானார்கள். அதற்கு காரணம் அவரின் தோற்றம்தான் அழகாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் இருந்ததால் அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

கமல் படம் என்றாலே நிறைய கதாநாயகிகள் இருப்பார்கள். அவர்களோடு அவருக்கு முத்தக்காட்சிகளும் இருக்கும். 80,90களில் கமலுடன் நடிக்கும் நடிகைகள் கொஞ்சம் பயந்துகொண்டே நடிப்பார்கள். கமலும் கேப் கிடைத்தால் ஸ்கோர் செய்துவிடுவார். அதற்கு பயந்தே சில நடிகைகள் கமலுடன் நடிக்க மறுத்தார்கள்.

சமீபத்தில் சென்னை வந்த கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘நான் கமல் சாரின் தீவிர ரசிகர். அவரின் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறேன். அவர் அவ்வளவு அழகாக இருப்பார். ஒருமுறை என் வீட்டிற்கு அவர் வந்தபோது அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘உங்களை ஒருமுறை கட்டி அணைத்து கொள்ளட்டுமா?’ என கேட்டேன் கமல் என்னை அன்போடு அணைத்துக்கொண்டார். 3 நாட்கள் நான் குளிக்கவே இல்லை. நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைத்தான் கல்யாணம் செய்திருப்பேன்’ என ஓப்பனாக பேசினார்.

கமல் தற்போது தக்லைப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் 36 வருடங்களுக்கு பின் மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய கமல் ‘இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் அவர்கள் என்னிடம் ஐ லவ் யூ சொல்லும் காட்சி எதுவும் இல்லை. ஆனால், நிஜத்தில் என்னிடம் தினமும் ஐ லவ் யூ சொன்னது ஜோஜூ தான். குட் மார்னிங் எல்லாம் சொல்லமாட்டார். முதலில் ஐ லவ் யூதான் சொல்வார்’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.

Next Story