பூஜாவ விடுங்க பாஸ் ஜோனிடாவ பாருங்க... சோசியல் மீடியாவில் தெறிக்கும் மீம்கள்...!

by ராம் சுதன் |   ( Updated:2022-02-16 13:02:36  )
jonita
X

நெல்சன் இயக்கத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் வரிகளை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரபிக்குத்து என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளை குவித்தது.

jonita

இப்பாடலை அனிருத் மற்றும் பாடகி ஜோனிடா காந்தி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். வெளியான வீடியோவில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடுவதும், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பூஜாவை விட ஜோனிடாவையே நாயகியாக போட்டு இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

jonita

jonita

மேலும் ஜோனிடா அழகை புகழ்ந்து பல மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோனிடா ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால் இவர் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலை பாடியதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

jonita

ஜோனிடா தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார். இதுவரை சினிமாவில் பலர் பிரபலமாகி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஜோனிடா இடம் பெற்றுள்ளார். தனது குரல் மற்றும் வசீகரமான தோற்றம் மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்த ஜோனிடாவிற்கு நல்ல மார்க்கெட் நிலவி வருகிறது.

jonita -aniruth

jonita -aniruth

ஜோனிடாவை எப்போது ஹீரோயினாக பார்க்கலாம் என்ற ஒரே கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அவர்களின் எதிர்பார்ப்புபடி ஜோனிடா ஹீரோயினாக மாறினாலும் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கூடிய விரைவில் இவரை ஹீரோயினாக பார்க்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அது நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Next Story