கவுதம் மேனனுக்கு இதாவது ஹிட் அடிக்குமா!.. ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ டிரெய்லர் வீடியோ!..
தமிழ் சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து அவர் இயக்கிய காக்க காக்க திரைப்படம் அவர் எந்த மாதிரியான இயக்குனர் என்பதை காட்டியது. கமலை வைத்து வேட்டையாடு விளையாடு கொடுத்தார்.
சிம்புவை வைத்து அவர் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சிம்புவுக்கே பெரிய கம்பேக் படமாக அமைந்தது. அதோடு, பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த திரிஷாவுக்கும் அப்படம் வெற்றியாக அமைந்தது. கவுதம் மேனன் கடைசியாக கொடுத்த வெற்றிப்படம் அதுதான்.
இதையும் படிங்க: இளையராஜாவின் பயோபிக்கை இயக்குவது யார்?!.. தனுஷ் கொடுத்த அதிர்ச்சி!.. இதெல்லாம் நியாயமே இல்ல!..
அதன்பின் அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு என சில படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் என்கிற படத்தை துவங்கினார். ஆனால், சூர்யா விலகிவிட சில வருடங்கள் கழித்து அதே கதையை விக்ரமை வைத்து எடுத்தார்.
ஆனால் இப்போதுவரை அந்த படம் வெளியாகவில்லை. அதேபோல், வேல்ஸ் இண்டர்நேசனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜோஸ்வா இமை போல் காக்க படத்தை எடுத்தார். இந்த படத்தில் வருண் ஹீரோவாக நடித்திருந்தார். படம் முடிந்து சில வருடங்கள் ஆகியும் அப்படம் வெளியாகவில்லை.
தற்போது இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. டிரெய்லர் என்றால் பல காட்சிகளை எடிட் செய்து வைப்பார்கள். ஆனால், இந்த டிரெய்லரில் சண்டை காட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது.