என்ன சிக்ஸ் பேக்!.. நான் காட்டுறேன் பாரு!..வீடியோவை வெளியிட்டு திக்குமுக்காட வைத்த ஜோதிகா!..
தமிழ் சினிமாவில் 2000களில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர். விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். சிம்ரனுக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக வலம் வந்தார்.
இதனிடையே நடிகர் சூர்யாவை கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக காதலித்து கரம் பிடித்தவர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், குடும்பம் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க : பாட்ஷா படத்தில் இந்த பஞ்ச் இப்படி தான் உருவாச்சா… கசிந்த சூப்பர் தகவல்…
ராட்சசி, 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற படங்கள் நல்ல வெற்றியை குவித்தது. இதனிடையில் தயாரிப்பு பணியிலும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நடிகர் மம்மூட்டி ஜோதிகாவிற்கு ஜோடியாகிறார்.
இந்த நிலையில் ஜோதிகா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகின்றது. அந்த வீடியோவில் பெரிய அளவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் மாஸ்டர்களே தோற்றுபோவார்கள். அந்த அளவுக்கு கடுமையாக உழைக்கிறார். மேலும் அந்த வீடியோவை பார்த்து பிரபலங்கள் பலரும் ஆச்சரியத்தில் திகைத்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Cj4daKzrpm8/?igshid=YmMyMTA2M2Y=