Categories: Cinema History Cinema News latest news

ஒரே தப்பால் தேசிய விருதை இழந்த ஜோதிகா.. எந்த படம் தெரியுமா?

கோலிவுட்டின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஜோதிகா. பெயருக்கு ஏற்றார் போல பூசினார் போல இருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்ற ஜோதிகாவின் அறிமுகம் பாலிவுட்டில் தான் நடைபெற்றது. பிரியதர்ஷன் இயக்கிய டோலி சாஜா கே ரக்னா படத்தில் தான் முதல் எண்ட்ரி. ஆனால் அம்மணிக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சரி இந்தி கைக்கொடுக்கவில்லை. சவுத் இந்தியா பக்கம் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்.

அதன் பொருட்டு, அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அப்படத்தில் ஜோதிகாவிற்கு ஒரு சின்ன பாத்திரமே கொடுக்கப்பட்டது. இருந்தும்,அது ஜோதிகாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. முதல் ஃபிலிம்பேர் விருதும் அப்படத்திற்கு ஜோதிகா பெற்றார். தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது.

இதை படிங்க:மனைவி ஜோதிகாவை கழட்டி விட்ட சூர்யா.?! பயப்படாதீங்க இது வேறு மாதிரியான சம்பவம்.!

திருமணத்திற்கு முன்னர் அவர் நடித்த படம் சந்திரமுகி. ரஜினிக்கு எதிராக செம நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். பி.வாசு இயக்கத்தில் இப்படம் சக்கை ஹிட் அடித்தது. ஜோதிகாவின் நடிப்பு பலராலும் புகழப்பெற்றது. அந்த வகையில் ஜோதிகாவிற்கு தேசிய விருது பரிந்துரைக்கப்பட்டது. இருந்தும், இறுதியில் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

இதுகுறித்து விசாரிக்கும் பொழுது, ஜோதிகா இறுதி மூவரில் இருந்ததாராம். ஆனால், சந்திரமுகியில் ஜோதிகா சொந்த குரலில் பேசவில்லை. டப்பிங் கலைஞரே அவருக்கு பேசினாராம். இது அவருக்கு பின்னடைவானது. இது அவருக்கு தேசிய விருதையும் நிராகரித்தது. இதனால் அம்மணி செம அப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan