மலையாள சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் ப்ரித்விராஜ். நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் அண்மையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமான கே.ஜி.எஃப் 2 மலையாள உரிமையை இவர் தான் கைப்பற்றினார்.

மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ராவணன், மொழி, குற்றப்பிரிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழிப் படங்களில் நடித்ததனால் ஏராளமான நண்பர்கள் கிடைத்தார்கள் எனவும் தமிழ் சினிமாவை பெற்றி பெருமையாகவும் பேசினார்.

மேலும் மொழி படத்தை பற்றி பேசுகையில் அந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. படத்தை பார்த்து விடியற்காலையில் ரஜினி சார் போன் பண்ணி வாழ்த்துக்களை கூறினார் என்றும் தெரிவித்தார். மேலும் ஒரு 4 பேரை வைச்சு எப்படி ஒரு ஹுயூமரான படம் எடுக்கலாம் என்பதற்கு மொழி படம் ஒரு முன்னுதாரணம் என கூறினார்.

மேலும் அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரகாஷ் ராஜுடன் எனக்கு ஒரு நல்ல பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறினார். மேலும் எந்த ஒரு மொழி படங்களில் நடித்தாலும் நான் ஒரு மலையாள நடிகன் தான் என கர்வமாக கூறினார்.
