மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..

by Saranya M |   ( Updated:2023-12-17 09:16:34  )
மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..
X

நடிகை ஜோதிகா முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு குட் பை சொல்லி இருந்தார். திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க கூடாது என சிவக்குமார் தடுத்ததால் தான் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என பல வருடங்களுக்கு முன்பே சர்ச்சைகள் வெடித்தன.

மேலும், 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவின் ஜோதிகா நடிக்கத் தொடங்கிய நிலையில், வீட்டில் பெரிய பிரச்சனையை வெடித்தது என்றும் அது கொஞ்சம் கொஞ்சமாக பெருசான நிலையில் தான் சூர்யாவும் ஜோதிகாவும் சிவகுமாரின் வீட்டை விட்டு மும்பையில் புதிய வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..

இந்நிலையில் சமீபத்தில், விஜய் டிவியின் நீயா நானா புகழ் கோபிநாத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி கொடுக்க ஜோதிகா தனக்கு குடும்பத்தில் பெரிதும் துணையாக இருந்ததே தனது மாமனார் சிவகுமார் தான் என்றும் அவருக்கும் தனக்கும் எப்போதும் மனக்கசப்பு ஏற்பட்டது இல்லை என்றும் அதெல்லாம் தேவையில்லாத வதந்திகள் தான் என அதிரடி பதில் அளித்திருந்தார்.

மேலும், நைசாக கோபிநாத் பின்னர் ஏன் மும்பைக்கு வீடு வாங்கிக் கொண்டு போனீர்கள் என்கிற கேள்வியை எழுப்ப, வயதான காலத்தில் அம்மா, அப்பாவை ரொம்பவே மிஸ் செய்தேன். திருமணமாகி 15 ஆண்டுகள் சென்னையில் மாமியார் வீட்டிலேயே இருந்து விட்டேன். கொரோனா நேரத்தில் அம்மா, அப்பாவின் உடல் நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டது. அதனால், தான் அங்கேயே வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டோம். குழந்தைகளின் படிப்புக்கும் அங்கே நிறைய ஆப்ஷன்கள் உள்ளன எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என்ன பிரபுதேவா நடிக்க வேண்டியதா? பல சித்து வேலைகள் நடந்து விஜய் படமாக மாறிய சம்பவம் – அட இந்தப் படமா?

Next Story