ஜோதிகாவிற்கு கிடைத்த காதல்பரிசு!..அட சூர்யா இல்லைங்க!..பிறந்தநாளின் போது ஷாக் கொடுத்த அந்த நடிகர்!..

by Rohini |   ( Updated:2022-10-19 06:33:30  )
jo_main_cine
X

தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு பிறகு பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஜோதிகா. ஹிந்தியில் இவர் முதல் அறிமுகம் என்றாலும் தமிழ்ரசிகர்கள் மனதின் சொந்தக்காரராக இன்றளவும் விளங்கி வருகிறார்.

jo1_cine

இவர் தனது காதல் கணவர் சூர்யாவுடன் திருமணப்பந்தத்தில் ஈடுபட்டு குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா தனது 44ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். ஜோதிகா ரீஎன்ரியில் பெரும்பாலும் ரகுமான், சசிகுமார் என கம்பேக் ஹீரோக்களுடனே ஜோடி சேர்ந்து சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : போராடி காதலியை கரம் பிடித்த இசையமைப்பாளர்!..வாழ்க்கையை வசந்தமாக்கிய எம்.ஜி.ஆர்!..

jo2_cine

மேலும் சமீபத்தில் மலையாளத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதுவும் நடிகர் மம்மூட்டியுடன் ஜோடி சேரப்போகும் நடிகை ஜோதிகாவிற்கு இது ஒரு காதல் கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருக்கிறது. 70 வயதுடைய மம்மூட்டி ‘காதல் : தி கோர்’ என்ற பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாகிறார்.

jo3_cine

நேற்று ஜோதிகாவின் பிறந்த நாள் என்பதால் இந்த காதல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மம்மூட்டி வெளியிட்டார். இதை அறிந்த நெட்டிஷன்கள் ஜோதிகாவிற்கு கிடைத்த காதல் பரிசு என்று இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த போஸ்டரில் இருவரும் பழங்காலத்தில் இருப்பது போன்ற லுக்கில் உள்ளனர்.

Next Story