சூர்யா-பாலா கூட்டணியில் ஒரு புதிய திருப்பம்...! படத்திலிருந்து விலகிய பிரபலம்...!
நடிகர் சூர்யா , இயக்குனர் பாலா கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன.
சூர்யாவை பாலா மிகவும் ஓடவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும் ஆனால் படப்பிடிப்பில் திரிப்தி இல்லாத பாலா எடுத்த ஷார்டை மீண்டும் மீண்டும் எடுக்க வைத்ததாகவும் அதனால் கடுப்பாகி போன படக்குழு புலம்பியதாகவும் தினமும் ஒரு தகவல் வெளிவந்தது.
இதற்கிடையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இதில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதை அறிவிக்கும் வகையில் சூர்யா ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்காக காத்திருக்கிறேன் என பாலாவை ட்விட் செய்து போட்டது மிகவும் வைரலானது.
இந்த நிலையில் மீண்டும் அந்த படப்பிடிப்பு ஆரம்பிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அப்பா சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஜோதிகா நடிக்க வில்லையாம். இந்த படத்தில் மட்டுமில்லாமல் இனி எந்த படத்திலும் நடிக்கபோவதில்லை என ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.