கங்குவாவுக்காக ஜோதிகா போட்ட பந்து… அப்படியே ரிபீட்டாகி சிக்சர் ஆகிடுச்சே..! இதெல்லாம் தேவையா?

Published on: November 19, 2024
jothika
---Advertisement---

கங்குவா படத்திற்குத் தொடர்ந்து வந்த நெகடிவ் விமர்சனங்களால் நொந்து போன ஜோதிகா படத்தில் உங்களுக்கு நல்ல விஷயங்களே கண்ணில் படவில்லையா? இரட்டை அர்த்த வசன படங்கள் எல்லாம் வருகிறது. அதைப் பார்க்கிறீர்கள்?

பதிலடி

Also read: நீ மட்டும் கஷ்டப்பட்டு வரல.. நானும் தான்! ரஜினியுடன் சண்டை போட்ட அந்த பிரபலம்

அப்படி இப்படின்னு சமீபத்தில் வரிந்து கட்டிக் கொண்டு கேள்வி எழுப்பி இருந்தார். இது படத்திற்குப் புரோமோஷன் ஆகும் என்று பார்த்தால் இணையவாசிகளை மீண்டும் உசுப்பி எழச் செய்துள்ளது. இதற்கு அவர்கள் கொடுத்த பதிலடியைப் பாருங்க.

30 நிமிடங்கள்

முதலில் சூர்யா நடிப்பை யாரும் குறை கூறவில்லை. ஜோதிகா குறிப்பிட்டது போல படத்தில் முதல் 30 நிமிடங்கள் சரியில்லை. இரைச்சல் சத்தங்களால் காதுகள் கிழிந்து போனது என்று தெரிவித்து இருக்கும் நிலையில் இதற்கு ஏன் ஜோதிகாவுக்கு இவ்வளவு கோபம் என இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சூரரைப் போற்று, ஜெய்பீம்

Jai bhim
Jai bhim

குறிப்பாக சூரரைப் போற்று படத்தையும், ஜெய்பீம் படத்தையும் கொண்டாடி தீர்க்கவில்லையா என ஜோதிகாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக கங்குவாவைக் குறை கூறினால் அந்தப் படத்தைப் பற்றிப் பேசாமல் மற்ற படங்களில் இதுபோல இல்லையா என குறைகூறுவது அவரது பக்குவமின்மையைக் குறிக்கிறது.

இரட்டை அர்த்தம்

அதிலும் குறிப்பாக பெண்களைக் கேலி செய்தும், இரட்டை அர்த்தம் கொண்ட பட வசனங்களையும், ஏற்றுக் கொள்ள முடியாத சண்டைக்காட்சிகள் உள்ள படங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் கங்குவாவை மட்டும் இந்தளவுக்கு விமர்சிப்பது ஏன் என்பதற்கு காட்டமாகவே பதில் அளித்துள்ளனர் இணையவாசிகள்.

விமானத்தில் ஃபுட்போர்டு

Also read: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு… திடீர் ட்விஸ்ட் கொடுத்த குட் பேட் அக்லி டீம்…

கங்குவாவின் முதல் 30 நிமிடங்கள் படத்தின் ஹீரோயினை சூர்யாவும், யோகிபாபுவும் அப்படித்தானே விமர்சித்துள்ளனர். படத்தின் கிளைமாக்ஸில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் சூர்யா ஃபுட்போர்டு அடிப்பதை 2024ல் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டு இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.