
Cinema News
தளபதி 68க்கு நோ சொன்ன ஜோதிகா!.. இப்போ 70 வயது நடிகரை கட்டிப்பிடித்துக் கொண்டு அப்படியொரு போஸ்!
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த நடிகை ஜோதிகா உமன் சென்ட்ரிக் படங்களில் மட்டும் நடிக்க போவதாக சொல்லிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
பெரிய நடிகர்கள் இல்லாமல் ரகுமான், வித்தார்த் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த வந்த ஜோதிகா சமீப காலமாக மம்மூட்டி, மாதவன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதையும் படிங்க: மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரம்பரிய காய்கறி திருவிழா – துவங்கி வைக்கும் அமைச்சர்
தளபதி 68 படத்தில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க வெங்கட் பிரபு பெரும் முயற்சி செய்து வந்த நிலையில், கடைசிவரை விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஜோதிகா சம்மதம் தெரிவிக்கவில்லை என .தகவல்கள் வெளியாகின.
வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாது என்கிற காரணத்தினால்தான் ஜோதிகா தளபதி 68 படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டதாகவும் பேச்சுக்கள் கிளம்பின. அவருக்கு பதில் தான் நடிகை சினேகா தளபதி 68 படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு பேசவே தெரியல!.. எப்படியாவது பேச வைங்க ப்ளீஸ்… பிரபலத்திடம் புலம்பிய எஸ்.ஏ.சி..
இந்நிலையில், 70 வயதான நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்த காதல் உருவாகியுள்ள நிலையில் வரும் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், காதல் தி கோர் என் டைட்டிலுக்கு அர்த்தம் ஏற்படுத்தும் வகையில் படம் உண்மையாகவும் நன்றாகவும் என் மனதுக்கு மிகவும் பிடித்த வகையில் வந்திருப்பதாகவும் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த படத்தோட வேல்யூ தெரியுமாடா உனக்கு!.. அனிருத்தை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இசைப்புயல் தான் கெத்து!..
லெஜெண்ட் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்றும் படப்பிடிப்பு சமயத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் மம்முட்டியை கட்டிப்பிடித்து இருப்பது போன்ற புதிய போஸ்டரை தற்போது ஜோதிகா வெளியிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் நடிகை ஜோதிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.