வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வண்டலூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஸ்டன்ட் கலைஞரான சுரேஷ் குமார் என்பவர் 15 அடி உயரத்தில் சண்டை காட்சிக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக கேபிள் அறுந்ததால், கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இச்சம்பவம் திரை உலகினரை சோகத்திற்குள்ளாக்கியது.
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து ஒரு பகீர் தகவலை தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன். அதாவது ஸ்டன்ட் மாஸ்டரான பீட்டர் ஹெயினுக்கும் தமிழ்நாட்டு ஸ்டன்ட் யூனியனுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தெலுங்கு சினிமா ஸ்டன்ட் யூனியனில் சேர்ந்துவிட்டாராம். இதனை தொடர்ந்து தற்போது “விடுதலை” திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார் பீட்டர் ஹெயின்.
இதையும் படிங்க: உலக நாயகனால் சிறைக்குச் சென்ற பிரபல வில்லன் நடிகர்… இப்படி பண்ணிட்டீங்களே ஆண்டவரே!!
இந்த நிலையில் பீட்டர் ஹெயின் தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்கள் சிலரையும் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர்கள் சிலரையும் இணைத்து “விடுதலை” திரைப்படத்திற்காக பணியாற்ற வைத்திருக்கிறார். இதில் தெலுங்கு மற்றும் தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு இடையே சிறு ஈகோ பிரச்சனை ஏற்பட்டதாம். இந்த ஈகோ பிரச்சனை காரணமாகத்தான் சமீபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…