“பிரபுதேவாவே விஜய் கிட்டத்தான் டான்ஸ் கத்துக்கனும்”… என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்…

by Arun Prasad |   ( Updated:2023-01-20 10:56:57  )
Varisu
X

Varisu

விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் “துணிவு” திரைப்படமும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் திரையரங்குகளில் மோதின. இதில் “துணிவு” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும் “வாரிசு” திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆனால் பேமிலி ஆடியன்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Varisu

Varisu

“வாரிசு” திரைப்படத்தில் விஜய் மிகவும் சிறப்பாக நடித்திருந்தாலும் சில பாடி லேங்குவேஜ்களை இணையவாசிகள் ட்ரோல் செய்து வந்தனர். அதே நேரத்தில் இத்திரைப்படத்தில் விஜய் சிறப்பாக நடனமாடியிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யின் நடனத்தை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Varisu

Varisu

“வாரிசு படத்தில் விஜய் நடனத்தில் பட்டையை கிளப்பிவிட்டார். இந்தியாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என்றால் அது விஜய்தான். தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபு தேவாவை புகழ்வார்கள். ஆனால் பிரபு தேவாவே வந்து விஜய்யிடம் கற்றுக்கொள்ளும் அளவுக்கு வெறித்தனமாக நடனமாடியிருக்கிறார் விஜய்” என அந்தணன் அப்பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் “விஜய்யிடம் இருப்பது கால்களா? இல்லை இயந்திரமா? என்றே தெரியவில்லை. ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் ஆகியோர் இணைந்து நடனமாடும்போது ஆண்களை பொறுத்தவரையில் ஹீரோயினைத்தான் பார்ப்போம், பெண்களாக இருந்தால் ஹீரோவை பார்ப்பார்கள். இதுதான் வழக்கம்.

இதையும் படிங்க: வயதான நடிகர்கள் இளம் வயது கதாநாயகிகளுடன் நடிப்பது ஏன் தெரியுமா?? ஒரு வேளை இதுதான் உண்மையோ!!

Varisu

Varisu

ஆனால் விஜய் நடனமாடினார் என்றால் அவர் அருகில் யார் நடனமாடினாலும் சரி, தேவலோகத்து ரம்பையே வந்து ஆடினாலும் சரி, ‘யம்மா கொஞ்சம் தள்ளி நில்லு’ என்பது போல்தான் இருக்கும். அந்த அளவிற்கு விஜய் நடனமாடி இருக்கிறார். மற்ற எல்லா படத்தை விடவும் இதில் விஜய் கியூட்டாகவும் அழகாகவும் இருக்கிறார்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story