உட்கார சேர் தராமல் அசிங்கப்படுத்திய விவேக்… பிளான் பண்ணி பழிவாங்கிய மூத்த பத்திரிக்கையாளர்..
ஜனங்களின் கலைஞன், சின்ன கலைவாணர் என பல படங்களுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்து வந்தவர் விவேக். இவரின் திடீர் மறைவு சினிமாத்துறையினரை மட்டுமல்லாது தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பகுத்தறிவு கருத்துக்களையும், சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் தனது நகைச்சுவையின் மூலம் மக்களின் மனதில் தூவியவர் விவேக். என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தனது வசனங்களின் மூலம் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை பரப்பியவர் என்பதால் அவரை சின்ன கலைவாணர் என்று அழைக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், விவேக்குடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
குங்குமம் இதழுக்காக விவேக் ஒரு பேட்டியளித்திருக்கிறார். அப்பேட்டியை அவர்கள் பிரசுரிக்கும்போது விவேக் சொன்னதை மாற்றி எழுதியிருக்கிறார்கள். அதாவது விவேக் “சிவாஜியால் எனக்கு பெருமை” என்று கூறியதை “என்னால் சிவாஜிக்கு பெருமை” என்று மாற்றிப்போட்டுவிட்டார்களாம்.
இதனை பார்த்த நடிகர் பிரபு மிகவும் டென்சன் ஆகிவிட்டாராம். உடனே விவேக்கை அழைத்து இது குறித்து பேசியுள்ளார். அப்போது விவேக், “நான் சொன்னதை தவறாக எழுதியிருக்கிறார்கள். இது என்னுடைய தவறு இல்லை” என உண்மையை கூறி பிரபுவை சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இந்த விஷயம் எதுவும் அறியாமல் இரண்டு வாரங்கள் கழித்து குங்குமம் இதழுக்காக அந்தணன், விவேக்கை பேட்டி எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்தணனை மிக கடுமையாக திட்டினாராம் விவேக். ஒரு சேரில் அமர்ந்துகொண்டு விவேக் அவரை திட்டிக்கொண்டிருக்க அந்தணன் சேர் இல்லாமல் நின்றுகொண்டிருந்தாராம்.
தன்னை உட்காரக் கூட சொல்லாமல் நிற்க வைத்து இப்படி திட்டுகிறாரே என அந்தணன், கடும் கோபம் அடைந்தாராம். விவேக்கை நாம் சும்மா விடக்கூடாது என மனதில் கங்கனம் கட்டிக்கொண்டாராம் அந்தணன். விவேக் ஒரு பகுத்தறிவுவாதியாகத்தான் தன்னை பொதுவில் காட்டிக்கொண்டார். ஆனால் அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததாம்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள் வேறொரு பத்திரிக்கைக்காக அந்தணன், இந்து முன்னணி கட்சியின் நிறுவனரான இராம கோபாலனை பேட்டி எடுக்கச் சென்றிருந்தாராம். அப்போது அவரிடம் “விவேக் தொடர்ந்து இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிக்கொண்டிக்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு இராம கோபாலன் விவேக்கை விமர்சித்து பல பதில்களை கூறினாராம்.
அந்த பேட்டி பிரசுரமான பிறகு விவேக்கை எதிர்த்து பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாம். இதனால் டென்சன் ஆன விவேக், ஆனந்த விகடன் பத்திரிக்கையில் ஒரு பேட்டி அளித்தாராம். அதில் “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. வெள்ளிக்கிழமையானால் வட பழனி கோவிலுக்குச் செல்வேன்” என அப்பேட்டியில் கூறி தன்னை தற்காத்துக்கொண்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.
இதையும் படிங்க: சிம்பு அப்படி செஞ்சதுல எந்த தப்பும் இல்லை… பிள்ளைக்கு சப்போர்ட்டுக்கு வரும் டி.ஆர்… அப்பான்னா இப்படில இருக்கனும்!!