அமரன் வெற்றியால் ஆட்டம் போடும் எஸ்கே!.. ஓவர் தலைக்கனமா?.. வெளுத்து வாங்கிய பிரபலம்!..
அமரன் திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் ஓவர் ஆட்டம் போட்டு வருகின்றார் என்று விமர்சகர் பிஸ்மி கூறி இருக்கின்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் மாறி இருக்கின்றார்.
இதையும் படிங்க: Pushpa 2: விஜயை காப்பாற்றிய புஷ்பா 2.. இல்லைனா சோலிய முடிச்சிருப்பாங்க! இப்ப தெரியுதா?
அமரன் திரைப்படம்:
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் அமரன் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்ததால் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மார்க்கெட் உயர்வு:
அமரன் திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வெகுவளவு உயர்ந்திருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு முன்பு வரை 25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கேள்விப்பட்ட பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு 60 கோடி ரூபாய் நியாயம் தான் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகின்றது .
அடுத்தடுத்த திரைப்படங்கள்:
அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை முடித்துவிட்டு இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
படம் தொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவும் வெளியாகவில்லை என்றாலும் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்கின்றார் என்பது ஏறத்தாழ உறுதியாகி இருந்தது. சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்குராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதனால் சிவகார்த்திகேயன் கோபப்பட்டு ஷுட்டிங்கில் இருந்து கிளம்பி விட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
பிஸ்மி விளக்கம்:
பிரபல சினிமா விமர்சனான பிஸ்மி தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் புறநானூறு விவகாரம் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தை கமிட் செய்தது அமரன் திரைப்படத்திற்கு முன்பு. அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்ட.து இதனால் நாம் கட்டாயம் சுதா கொங்குரா படத்தில் நடிக்க வேண்டுமா? என்கின்ற எண்ணம் அவரிடையே உருவாகி இருக்கலாம்.
இதையும் படிங்க: Biggboss Tamil: சரவணனை வெளியில் அனுப்பியது போல அருணை தள்ளுங்க… பொங்கும் பிரபலம்!..
மேலும் இனி நாம் சங்கர், மணிரத்தினம் போன்ற பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைக்கலாம். அமரனுக்கு முன்னதாகவே சுதா கொங்குரா படத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருந்தார். அப்போது சுதா கொங்குரா சிவகார்த்திகேயனுக்கு தேவைப்பட்டார். இப்போது தேவைப்படவில்லை போல' என்று கூறியிருந்தார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் அமரன் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.