
Cinema News
மாநாடு படம் ஹிட் ஆனதுக்கே விஜயகாந்த் பட இயக்குனர்தான் காரணம்- ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்…
Published on
வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கிய “சென்னை 28”, “மங்காத்தா”, “சென்னை 28-பார்ட் 2” ஆகிய திரைப்படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் “மாநாடு”.
இத்திரைப்படம் டைம் லூப் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படமாகும். சிம்பு கெரியரில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமாக “மாநாடு” அமைந்தது. அதே போல் வெங்கட் பிரபு அதற்கு முன்பு இயக்கிய “பிரியாணி”, “மாசு என்கிற மாசிலாமணி” ஆகிய திரைப்படங்கள் சுமாராகவே ஓடியது. அதன் பின் அவர் இயக்கிய “சென்னை 28 பார்ட் 2” திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் “மாநாடு” திரைப்படமே வெங்கட் பிரபுவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
வெங்கட் பிரபு சமீபத்தில் தெலுங்கில், “கஸ்டடி” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. தற்போது விஜய்யின் “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, வெங்கட் பிரபுவை குறித்து மிகவும் காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
Maanaadu
“மாநாடு மாதிரி ஒரு அரசியல் திரைப்படம் போலவே வெங்கட் பிரபு தன்னை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என்று நினைத்து விஜய் ஒப்புக்கொண்டிருந்தால் அதை விட ஒரு முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. என்ன காரணம் என்றால், மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததற்கு காரணம் அத்திரைப்படத்தின் திரைக்கதையும் அந்த படத்தில் பேசப்பட்ட அரசியலும்தான்.
Bismi
முக்கியமாக அந்த அரசியல் சம்பந்தப்பட்ட பகுதிகளை விஜயகாந்தின் பல படங்களை இயக்கிய லியாகத் அலிகான்தான் எழுதிகொடுத்தார். வெங்கட் பிரபுவிற்கு சமூக அரசியல் குறித்து எதுவுமே தெரியாது” என அப்பேட்டியில் பிஸ்மி கூறியிருந்தார்.
Liaquat Ali Khan
லியாகத் அலிகான் விஜயகாந்தின் “பாட்டுக்கு ஒரு தலைவன்”, “ஏழை ஜாதி”, “எங்க முதலாளி” போன்ற திரைப்படங்களை இயக்கியவர். மேலும் “புலன் விசாரணை”, “கேப்டன் பிரபாகரன்”, “மாநகர காவல்” போன்ற பல திரைப்படங்களின் கதையாசிரியராகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீ பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு வேற வரனுமா?.. லோகேஷ் கனகராஜை கலாய்த்து தள்ளிய விஜய்!
Thalapathy 68 : விஜயின் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் அனிருத்...
Rajini 170: ரஜினியின் நடிப்பில் த.ச. ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்திற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள...
80களில் பல ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக மக்கள் மனதில் இடம்...
Vidamuyarchi: அஜித் நடிப்பில் தயாராக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படப்பிடிப்பிற்காக படக்குழுவை சேர்ந்த டெக்னீஷியன்கள் ஏற்கனவே துபாயில் முகாமிட இன்று அஜித்...
Actor R.J.Balaji: தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர். வானொலி ஒலிபரப்பாளராக இருந்த இவர் முதலில் சினிமாவில் துணை...