“துணிவு படத்துக்கு தூக்க கலக்கத்தில் ட்யூன் போட்ட இசையமைப்பாளர்”… மூத்த பத்திரிக்கையாளர் ஓபன் டாக்…
அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே போல் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வருகிற 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இணையத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளதால் ரசிகர்கள் வெறிக்கொண்டு இத்திரைப்படங்களுக்காக காத்திருக்கின்றனர்.
அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் கடந்த 31 ஆம் தேதி வெளியானது. டிரைலரில் அஜித்குமார் டெரிஃபிக்காக காட்சித் தருவதால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.
ஜிப்ரான் இசையில் “துணிவு” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. அதே போல் தமன் இசையில் “வாரிசு” திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. இந்த நிலையில் “வாரிசு” மற்றும் “துணிவு” திரைப்படத்தின் இசையை குறித்து தனது பேட்டி ஒன்றில் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி.
“இசையமைப்பாளர் தமனுக்கு விஜய் பட வாய்ப்பு என்பது மிகப்பெரிய விஷயம். தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் எனவும் விஜய் படத்திற்கு இசையமைத்ததே போதும் இதுவே தன்னுடைய சாதனை எனவும் தமன் பேசுகிறார். இவ்வளவு பேசுகிறவர் எந்த அளவுக்கு சிரத்தை எடுத்து பாடல்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏதோ இடது கையால் மியூசிக் போட்டதுபோல் வாரிசு பாடல்களை கொடுத்திருக்கிறார்” என்று பிஸ்மி அப்பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: “ரேஷன் கடைக்காரனை வந்து அடிங்க கேப்டன்”… கூட்டத்தை பிளந்துக்கொண்டு வந்து புகார் கொடுத்த பாட்டி…
மேலும் பேசிய அவர் “மறுபக்கம் பார்த்தோமானால், துணிவு படத்திற்கு இசையமைக்க ஜிப்ரானுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கமல்ஹாசன் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்தவர். ஆனாலும் அவருக்கு பெரிய திருப்புமுனை அமையவில்லை. அப்படிப்பட்டவருக்கு துணிவு படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தவில்லை. தூக்க கலக்கத்தில் போட்ட மாதிரி இசையமைத்திருக்கிறார். இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.