அஜித்தை நம்பிய ஆந்திர தயாரிப்பாளருக்கு திருப்பதி லட்டு சைஸ்ல பெரிய நஷ்டம்!.. பிரபலம் ரிப்போர்ட்!..

#image_title
விஷாலை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வரை வசூல் செய்தது. ஆனால், அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் அளவுக்கு கூட வசூல் செய்யாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்திருப்பதாக பத்திரிகையாளர் பிஸ்மி தனது பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வீடியோவில் கூறியுள்ளார்.
ரெட் டிராகனாக அஜித் குமாரை ஃபேன்ஸ்களுக்கான ட்ரீட்டாகவே படத்தை இயக்கி கொடுத்தாலும், இந்த படம் 300 கோடி வசூலை கூட தொடவில்லை. விஜய்யின் மெகா சீரியல் படமான வாரிசு திரைப்படமே 300 கோடியை தொட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
லியோ, கோட் படங்கள் எல்லாம் பெரிய வசூல் வேட்டையை நடத்தியிருந்தன. குட் பேட் அக்லி படத்துக்கு அஜித் குமாருக்கு மட்டுமே சம்பளமாக 165 கோடி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டுமே 146 கோடி தான் வசூல் செய்ததாக கூறுகிறார்.

உலகளவில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் 212 கோடி ரூபாய் தான் என்றும் படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு அதிகபட்சமாக 66 கோடி வரை நஷ்டம் எனக் கூறியுள்ளார்.
பிஸ்மியின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமே குட் பேட் அக்லி தான் எனக் கூறப்பட்டாலும் இந்த படம் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் படத்தின் வசூலை கூட தொட முடியவில்லை என்பது தான் சோகமான விஷயமாக மாறியுள்ளது.
25 நாட்களில் ஒட்டுமொத்தமாக குட் பேட் அக்லி 212 கோடி வசூல் மட்டுமே வந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உலகளவிலான வசூல் அறிவிப்பை வெளியிடாமலே இருக்கிறது.