“பொழுது போகலைன்னு நடிக்க வந்த உதயநிதி”… தெனாவட்டாக வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட மூத்த பத்திரிக்கையாளர்…

by Arun Prasad |
Udhayanidhi Stalin
X

Udhayanidhi Stalin

“ஓகே ஓகே” திரைப்படத்தில் தொடங்கி “மாமன்னன்” திரைப்படம் வரை தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத விநியோகஸ்தராக மாறியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், சமீப காலமாக பல வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் உதயநிதி தான் நடித்து வரும் ‘மாமன்னன்” திரைப்படத்தையும் கமல்ஹாசனின் “இந்தியன் 2”, “KH 234” போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் “இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை” எனவும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஒரு பேட்டியில் பேசியபோது “அரசியலுக்கு வருவதில் ஈடுபாடு இல்லை” என கூறியிருந்தார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்துதான் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து சில காட்டமான கருத்துக்களை, சமீபத்திய பேட்டி ஒன்றில் முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி. அதில் அவர் கூறியது பின்வருமாறு…

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

‘உதயநிதி ஸ்டாலினை நாம் நடிகராக பார்க்க முடியாது. அவரை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல்வாதி வீட்டுப்பிள்ளை. அவர் பொழுது போகாமல்தான் சினிமாவில் நடிக்க வந்தார். ஏனென்றால் வெறுமனே மு.க.ஸ்டாலினின் மகன் என்ற முகத்துடன் மக்களை அணுகினால் பெரிய வரவேற்பு இருக்காது. ஆதலால் சினிமா புகழை வைத்து மக்களின் மத்தியில் சென்று சேரலாம் என்று நினைத்துத்தான் அவர் நடிக்க வந்தார்” என அப்பேட்டியில் பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும் அப்பேட்டியில் பேசிய பிஸ்மி “உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படம்தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது உதயநிதி ஒரு நடிகராக சினிமாத் துறையில் வெற்றி பெறவில்லை.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

அவர் திரைப்படங்கள் ஊடகங்களில்தான் பெரிதாக பேசப்படுமே தவிர, மக்கள் திரண்டுப்போய் பார்த்து வெற்றிப்படங்களாக அதனை ஆக்கியது இல்லை. ஓகே ஓகே படத்தை தவிர. உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படம் சரியாக வசூல் ஆகவில்லை என சினிமாத்துறையில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அந்த அளவுக்குத்தான் சினிமாவில் உதயநிதியின் இடம் இருந்தது. அதனால் இப்படி ஒரு இடத்திற்காக அரசியலை நாம் ஏன் பகுதி நேரமாக பயன்படுத்த வேண்டும், முழு நேரமாகவே பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story