சிவகார்த்திகேயனை பார்த்து டிரெண்டை மாற்றிய சந்தானம்… ஓஹோ!! இதுதான் விஷயமா??
பிரபல நகைச்சுவை நடிகரான சந்தானம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகப்பிரபலமாக அறியப்பட்டார் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதன் பின் சினிமாவிற்குள் அடியெடுத்துவைத்த சந்தானம், தொடக்கத்தில் சிறு சிறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
காலப்போக்கில் தனக்கென ஒரு தனி பாணியை வடிவமைத்துக்கொண்ட சந்தானம், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தார். இந்த காலகட்டத்தில் “அறை எண் 305-ல் கடவுள்” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பின் சந்தானம் மீண்டும் கதாநாயகனாக நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற திரைப்படம் சக்கைபோடு போட்டது.
அத்திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் காமெடி ரோலில் நடிப்பதை குறைத்துக்கொண்டே வந்தார். சமீப காலமாக சந்தானம் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். எனினும் சந்தானம் பாணியில் காமெடி கதையம்சங்களிலேயே சந்தானம் நடித்து வந்தார்.
எனினும் சமீபத்தில் வெளிவந்த “குலுகுலு”, “ஏஜென்ட் கண்ணாயிரம்” ஆகிய திரைப்படங்களில் சந்தானம் காமெடிக்கு அவ்வளவாக இடம் தரவில்லை. ஆதலால் இத்திரைப்படங்கள் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. சந்தானம் காமெடி ஹீரோவாக அல்லாமல் ஒரு சீரீயஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என பேச்சுக்கள் அடிபட்டன.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் சந்தானம் சீரீயஸான ஹீரோவாக மாறிப்போனதாகவும், அவ்வாறு சந்தானம் மாறிப்போனதற்கான காரணத்தை குறித்தும் ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த்துடன் பல முறை மோதிய சூர்யா??… இதை யாருமே கண்டுக்கலை போலயே!!
“சந்தானம் சமீப காலமாக சிவகார்த்திகேயனை தனக்கு போட்டியாளராக நினைத்துக்கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயனை வெறுப்பேத்துவதற்காகத்தான் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் நடித்திருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
ஏனென்றால் சந்தானம் காமெடி மட்டும்தான் பண்ணுவார் என விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் காமெடியே இல்லாமல் தான் ஒரு படம் பண்ணுவேன் என வேண்டுமென்றே நடித்த படமாகத்தான் எனக்கு தெரிகிறது” என அப்பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
சந்தானத்தை போலவே சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்தான் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.