ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் போற்றும் இசையமைப்பாளராக வலம் வருபவர். ஆஸ்கர் மேடையில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். இளையராஜாவுக்கு பிறகு தமிழ் இசையுலகை ஆளும் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருபவர்.
இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலம், அராபிக் மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மதத்தின் மீது ஆன்மீக ரீதியாக பற்றுக்கொண்டவர். “குவாஜா மேரா குவாஜா”, “மவுலா மவுலா” ஆகிய பாடல்களின் மூலம் இஸ்லாத்தின் மீதான அவரின் ஆன்மீக பக்தியை நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த ஒரு அதிசய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது செய்யாறு பாலு, பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த சமயத்தில் ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த தாஜ் நூரிடம் செய்யாறு பாலு பேட்டி கண்டாராம். (பின்னாளில் தாஜ் நூர் “வம்சம்”, “எத்தன்” ஆகிய பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தற்போதும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்)
அப்போது தாஜ் நூர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஒரு அதிசயமான தகவலை கூறினாராம். அதாவது “பம்பாய்” திரைப்படத்தின் ரீரெக்கார்டிங்கின் போது அந்த படத்திற்காக ஒரு இசைக்கோர்வையை உருவாக்கி ஹார்ட் டிஸ்க்கில் Save செய்து வைத்திருந்தாராம். ஆனால் திடீரென ஹார்ட் டிஸ்க்கில் இருந்து அந்த இசைக்கோர்வை காணாமல் போய்விட்டதாம்.
அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் இந்தியாவுக்கு அறிமுகமான புதிது. ஆதலால் அதிக தொழில்நுட்பங்கள் கிடையாது. அதனால் அந்த ஹார்ட் டிஸ்க்கில் அந்த இசைக்கோர்வையை எவ்வளவோ முயன்றும் recover செய்ய முடியவில்லையாம். இனி அந்த இசைக்கோர்வையை உருவாக்க வேண்டும் என்றால் மீண்டும் பல இசை கலைஞர்களை வரவழைத்துதான் உருவாக்க முடியுமாம்.
இசைக்கோர்வை காணாமல்போன விஷயத்தை ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூறியுள்ளார் தாஜ் நூர். அதனை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் அமைதியாக யோசித்துவிட்டு மெதுவாக தொழுகை செய்யப் போனாராம். தொழுகை செய்து முடித்த பிறகு திரும்ப வந்த ரஹ்மான், “இப்போது முயன்று பாருங்களேன்” என்று சொன்னாராம். அதன் பின் மீண்டும் Recover செய்ய முயற்சி செய்தாராம். இந்த முறை அந்த இசைக்கோர்வையை recover செய்து மீட்டு எடுத்துவிட்டார்களாம். இது குறித்து தாஜ் நூர் கூறியபோது, “இது முழுக்க முழுக்க உண்மை. ரஹ்மான் சாரிடம் ஒரு இறை சக்தி இருக்கிறது” என கூறினாராம்.
இதையும் படிங்க: பக்கா கிரிமினல் மைண்ட் எம்ஜிஆர்! அந்த சம்பவத்தை எப்படி டீல் பண்ணார் தெரியுமா?
Nayanthara: கேரளாவை…
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…