வணங்கான் படம் டிராப் ஆனது எதுனால தெரியுமா?? சீக்ரெட்டை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..

by Arun Prasad |   ( Updated:2022-12-18 05:24:54  )
Vanangaan
X

Vanangaan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, நடிக்க வந்த புதிதில் பல விமர்சனங்களை கடந்துதான் முக்கிய நடிகராக முன்னேறி வந்தார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அவர் பட்ட அவமானங்களை அவரது பல பேட்டிகளில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக அவரது உயரத்தை பலரும் கிண்டல் அடித்து வந்தனர்.

ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் துச்சமாக எண்ணிய சூர்யா, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவராகவும் தற்போது தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

Suriya

Suriya

சூர்யாவின் சினிமா கேரியரில் பல திரைப்படங்கள் முக்கிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தாலும் அவரை ஒரு தனித்துவமான நடிகராக அடையாளப்படுத்தியது “நந்தா” திரைப்படம்தான். இத்திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையான திரைப்படமாகவும் அமைந்தது.

“நந்தா” திரைப்படத்தை இயக்கியவர் பாலா என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதே போல் பாலாவுடன் இணைந்து “பிதாமகன்” திரைப்படத்திலும் நடித்தார் சூர்யா. இந்த இரு திரைப்படங்களுமே சூர்யாவின் கேரியரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டுச்சென்றது. ஆதலால் இயக்குனர் பாலாவின் மீது சூர்யாவுக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு.

Nandha

Nandha

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வணங்கான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்து வந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பல செய்திகள் உலா வந்தன. ஆனால் சூர்யா தரப்பு இந்த செய்தியை மறுத்து வந்தது. மேலும் “வணங்கான்” திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் பாலா வேறு ஒரு நடிகரை வைத்து அத்திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் “வணங்கான்"”திரைப்படத்தில் இருந்து சூர்யா வெளிவந்ததற்கான காரணத்தை குறித்த தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இவர்தான் ரியல் சர்தார்… உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்… வரலாற்றில் மறைந்து போன உளவாளியின் சோகக் கதை…

Vanangaan

Vanangaan

“நந்தா, பிதாமகனில் பார்த்த சூர்யாவையே பாலா நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த பாலாவை சூர்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூர்யாவை ஓடச்சொல்லியே 9 நாட்கள் படப்பிடிப்பு நடத்திருக்கிறார் பாலா.

பத்தாவது நாளில் சூர்யா ‘என்ன சார் ஓடச்சொல்லிட்டே இருக்குறீங்க?’ என கேட்டிருக்கிறார். ‘சொன்னதை மட்டும் செய்யுங்க சூர்யா’ என பாலா கூறியிருக்கிறார். அதில் இருந்துதான் பிரச்சனை தொடங்கியது” என செய்யாறு பாலு அப்பேட்டியில் கூறியிருந்தார்.

Next Story