விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் அஜித் நடித்த “துணிவு” திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளதால் ரசிகர்கள் வெறிக்கொண்டு இத்திரைப்படங்களுக்காக காத்திருக்கின்றனர்.
விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் வெளியிடுவதாக அறிவிப்பு வந்தது. அதே போல் அஜித்தின் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஆதலால் “துணிவு” திரைப்படத்திற்குத்தான் திரையரங்குகள் அதிகமாக ஒதுக்கப்படும் என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் தற்போது இரு திரைப்படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “வாரிசு” படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ “தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன். அதனால் சமமாக திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கவேண்டும் என கேட்கப்போகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ரேவதி என்ற பெயருக்கு பின்னால் உள்ள சுவாரசிய தகவல்… எல்லாம் பாரதிராஜாவோட சென்டிமென்ட்தான்…
தில் ராஜூவின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தில் அஜித், விஜய் ரசிகர்களிடையே யார் நம்பர் ஒன் என்ற விவாதமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“தெலுங்கில் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி படம் தயாரிக்கிறார். அவர் ஆந்திராவில் பாலகிருஷ்ணாவை விட சிரஞ்சீவிதான் டாப் என்று அங்குச் சென்று கூறமுடியுமா? தெலுங்கில் இருந்து வந்து என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என அப்பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “தில் ராஜூ எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசுகிறார் என தெரியவில்லை. வெளிநாடுகள் என்று எடுத்துக்கொண்டால் விஜய் படங்களுக்கு நல்ல வியாபாரம் உண்டு. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தான் நம்பர் ஒன். அஜித்தை அடிச்சிக்கவே முடியாது” என அப்பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.