தென்னிந்திய சினிமா உலகின் கவர்ச்சி நடிகையாக கோலோச்சிய சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில்க் ஸ்மிதாவின் தற்கொலை அன்றைய தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்றுவரை சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கான காரணம் மர்மமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா தற்கொலை குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
“சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு டாக்டர் காதலராக இருந்திருக்கிறார். ஏறக்குறைய இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அந்த டாக்டரின் கட்டுப்பாட்டில்தான் சில்க் ஸ்மிதா இருந்திருக்கிறார். அந்த டாக்டர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் சில்க் ஸ்மிதா செய்வார்.
ஒரு கட்டத்தில் அது மிகப்பெரிய டார்ச்சராக மாறிவிட்டது. சில்க் ஸ்மிதா ஒரு சுதந்திரமான மனநிலை கொண்ட நடிகை. ஒருவர் தன்னை கன்ட்ரோலில் வைத்திருக்கிறார் என்ற விஷயமே அவருக்கு பின்னாளில் வெறுப்பை தந்திருக்கிறது. ஆதலால் சில்க் ஸ்மிதா சரியாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கிறார். சினிமாவின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து வந்திருக்கிறது” என அப்பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர் “சில்க் ஸ்மிதாவின் காதலரான டாக்டர் மிகவும் வயதானவர். அவருக்கு சில்க் ஸ்மிதா வயது ஒத்த ஒரு மகன் இருந்தான். அந்த மகன் சில்க் ஸ்மிதாவை ஒரு தலையாக காதலித்து வந்தான். மேலும் அவன் சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறினாராம்.
இப்படி எத்தனை பேர்தான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறுவார்கள் என்ற வெறுப்பின் உச்சத்தில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக இன்று வரை கோலிவுட் வட்டாரங்களில் பேசுப்படுகிறது” என செய்யாறு பாலு அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…