இளையராஜா மட்டம் என்றால் இவர் மட்டும் ஒழுங்கா? – ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்த பத்திரிக்கையாளர்..
தமிழின் பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. இதுவரை 1000க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ளார் இளையராஜா.
திறமையை பொறுத்தவரை இளையராஜாவை எந்த குறையும் சொல்ல முடியாது என்றாலும், ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் இளையராஜா எதையாவது பேசிவிடுவது உண்டு. சமீபத்தில் அமெரிக்காவில் கூகுள் நடத்திய விழா ஒன்றில் கலந்துக்கொண்ட இளையராஜா அங்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
அங்கு பேசும்போது இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரமண மகரிஷி உயிர்த்தெழுந்தது உண்மை என பேசியிருந்தார். ரமண மகரிஷிக்காக இளையராஜா ராஜாவின் ரமணமாலை என்ற ஒரு ஆல்பத்தை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ரமணர் மீது பக்தி கொண்டவர் இளையராஜா.
இந்த நிலையில் இதுக்குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜா ஒரு மட்டமான மனிதர் என கூறினார். அமெரிக்க மக்கள் ஒரு கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருக்கும்போது அந்த நம்பிக்கைக்கு எதிரான விஷயங்களை பேசி சர்ச்சையை கிளப்புவது நல்ல விஷயமா? என கூறி இளையராஜாவை விமர்சித்திருந்தார்.
அந்தணன் கொடுத்த பதிலடி:
இந்த நிலையில் ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் இதுக்குறித்து கூறும்போது அனைத்து மனிதர்களுமே தவறுகள் செய்வோம். ஆனால் அதை சுட்டிக்காட்டுவதற்கு தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் மட்டமான மனிதர் என கூறுகிறார். முன்பு குழந்தைகள் பாட்டு பாடும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார் ஜேம்ஸ் வசந்தன். சரியாக பாடாத குழந்தைகளிடம் அதை மென்மையாக எடுத்து கூறாமல் அந்த குழந்தைகள் அழும் அளவிற்கு மோசமாக அவர்களை விமர்சித்துள்ளார்.
இதற்காக நாம் ஜேம்ஸ் வசந்தனை மட்டமான மனிதர் என கூறிவிட முடியுமா? எனவே ஜேம்ஸ் வசந்தன் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தியது தவறு என அந்தணன் கூறியுள்ளார்.