சிவாஜிக்கு இணையான நடிப்பை பார்த்தேன்!. 2 நிமிட காட்சியை சிங்கிள் ஷாட்டில் நடித்த எஸ்.ஜே சூர்யா..

அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. பல காலங்களாக தமிழ் சினிமாவில் இவர் உதவி இயக்குனராக இருந்து வந்தார். அதன் பிறகு இயக்குனர் வாய்ப்பை பெற்றார்.
ஆனால் கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே எஸ்.ஜே சூர்யாவின் பெரும் ஆசையாக இருந்தது. எனவே அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே நடிக்கலாம் என முடிவு செய்தார். நியு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். படத்தில் சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அந்த படத்தில் கவர்ச்சி காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மேலும் படமும் பல சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும் தொடர்ந்து வியாபாரி, அன்பே ஆருயிரே, இசை என பல படங்களில் நடித்து வந்தார் எஸ்.ஜே சூர்யா. பிறகு சினிமாவில் வெகுநாட்கள் நடிக்காமல் இருந்தார்.
எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு:
ஸ்படைர் படத்தில் வில்லனாக நடித்த பிறகு எஸ்.ஜே சூர்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து டான், மாநாடு என பல படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா தற்சமயம் பொம்மை என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

sj suryah 2
நாளை 16.06.2023 அன்று இந்த படம் திரையில் வெளியாக இருக்கிறது. இது ஒரு சைக்கோ த்ரில்லர் மற்றும் காதல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படம் குறித்து பத்திரிக்கையாளர் அந்தனன் கூறும்போது படத்தில் ஒரு காட்சி 2 நிமிடம் செல்கிறது. சிங்கிள் ஷாட்டில் அந்த சீன் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு காட்சியில் பல வகையான நடிப்பை காட்டுகிறார் எஸ்.ஜே சூர்யா. சிவாஜிக்கு பிறகு அப்படி ஒரு நடிப்பை இவரிடம்தான் பார்க்கிறேன்” என வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல நடிகருக்கு சீட் தர மறுத்த கல்லூரி.. மாஸ் காட்டி உதயநிதி செய்த வேலை…