latest news
மாதம்பட்டி ரங்கராஜின் ஜெராக்ஸ் – குழந்தை போட்டாவை பகிர்ந்து மகிழ்ந்த ஜாய் கிரிசல்டா
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா மாதம்பட்டி ரங்கராஜ் துவக்கம் முதல் பிரச்சனை வரை செய்தி தேவை
பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் ஜாய் கிரிசல்டா. இவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரங்கராஜ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் மட்டுமின்றி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அதுமட்டுமல்லாமல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவ்து திருமணம் செய்த்ஹது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதனைதொடர்ந்து தாங்கள் திருமணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள்,வீடியோக்கள் மற்றும் கிரிசல்டாவுக்கு பர்சனலாக அனுப்பிய விடியோக்கள் என அனைத்தௌயும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார். ஜாய் கிரிசல்ட்டாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு நான் தான் அப்பா என்றால் அந்த குழந்தையின் பராமரிப்புச் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அறிக்கை விட்டார். தற்போது டி.என்.ஏ பரிசோதனை செய்ய கட்ந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாய் கிரிசல்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனின் புகைப்படத்தை பகிர்ந்து மகன் அப்படியே அவனது அப்பா மாதம்பட்டி ரங்கராஜின் ஜெராக்ஸ். மேலும் அவனின் தாத்தா மாதம்பட்டி தங்கவேலுவைப் போலவும் இருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர்.
