ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ரணகளமா இருக்கே!.. ஜூனியர் என்டிஆரின் தேவரா க்ளிம்ப்ஸ் எப்படி இருக்கு?
ராஜமெளலி இயக்கத்தில் நடிச்சு ஹீரோவாகிட்டா அதன் பிறகு பிரம்மாண்ட படங்களில் மட்டுமே நடிகர்கள் நடிக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி எழுதப்பட்டு விடுகிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் ஒரு ஹிட் கொடுக்க பல படங்களை காவு கொடுக்க நேர்ந்தது. கடைசியாக ஆஸ்கர் வரை சென்ற ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் ராம்சரணை முந்திக் கொண்டு வரும் தேவரா படத்தின் ரிலீஸ் தேதி புதிய கிளிம்ப்ஸ் உடன் வெளியாகி உள்ளது.
கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா திரைப்படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் மட்டுமின்றி இந்த படமும் ஆர்ஆர்ஆர் படத்தைப் போலவே பான் இந்தியா ரிலீஸ் தான். மேலும், இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெளியாகி உள்ள கிளிம்ப்ஸிலும் ஒரு ஆங்கிலப் பாடலை பிஜிஎம்மாக போட்டு மனுஷன் மிரட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு!.. ராஷ்மிகா மந்தனா இவரைத்தான் திருமணம் செஞ்சிக்கப் போறாராம்?
கப்பல் மற்றும் கடலை மையமாக வைத்து பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஃபீலிங்கில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸில் கத்தியை எடுத்துக் கொண்டு நிலவையே ரத்த நிலாவாக மாற்றும் அளவுக்கு ஜூனியர் என்டிஆர் ரணகளப்படுத்துகிறார்.
கடலில் மீன்களை விட அதிகமாக கத்தியும் ரத்தமும் தான் கொட்டிக் கிடக்கிறது. அதனால், தான் இதற்கு செங்கடல் என்கிற பெயர் உள்ளது என ஜூனியர் என்டிஆர் தமிழில் பேசும் மாஸ் வசனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கண்டிப்பாக ஏப்ரல் மாதம் சம்மர் விடுமுறைக்கு செம சம்பவம் இருக்கப் போகிறது என தெரிகிறது. கடைசி வரைக்கும் ஜான்வி கபூரை ஒரு சீன் கூட காட்டலையே என அவரது ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர்.