நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா!… வரும் நவம்பர் 27 தீர்ப்பு?!… என்ன ஆக போதோ?…

Published on: November 21, 2024
---Advertisement---

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு இன்று நடைபெற்ற நிலையில் வரும் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சினிமாவில் தற்போது படு பிஸியாக நடித்து வருகின்றார்.  தனது இயக்கத்தில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் தனுஷ், அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாங்காக்கில் நடைபெற்று வருகின்றது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷை 3 நாள் டார்ச்சர் செய்த தனுஷ்!.. சூட்டிங்கில் நடந்த களேபரம்?!.. விளாசிய பிரபலம்!..

நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு லிங்கா, யாத்திரை என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வளம் வந்த இவர்கள் 20 வருடம் சேர்ந்து வாழ்ந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருந்ததால் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்கள். இரு குடும்பத்தார் தரப்பிலிருந்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் சுமூகமான முடிவு வராத காரணத்தால் இருவரும் பிரிந்து செல்வது என்கின்ற முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

இவர்கள் விவாகரத்திற்கான மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முதல் இரண்டு முறை விசாரணைக்கு வந்த போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து ஆஜராகவில்லை. இதனால் இருவரும் இணைந்து வாழ போகிறார்கள் என்று சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. இது தனுஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .

இதையும் படிங்க: அமரனுக்கு எதிராக 1.1 கோடி இழப்பீடு கேட்டு மாணவர்.. இது என்ன புது பிரச்னையா?

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே ஆஜராகி இருந்தார்கள். இருவரிடமும் குடும்ப நல நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார். இருவரிடமும் சேர்ந்து வாழ்கிறீர்களா? என்று நீதிபதி கேட்டுள்ளார்.

அதற்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தனுஷும் ஐஸ்வர்யாவும் உறுதியாக தெரிவித்தனர். இதையடுத்து வரும் 27ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கின்றார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.