தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய திரையுலகே அவரை அப்படித்தான் அழைக்கிறது.
ஒரு நடிகர் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டுமெனில் ஆக்ஷன் திரைப்படங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் சூப்பர் ஹீரோ ஆக முடியும். எம்.ஜி.ஆர் அந்த ரேஞ்சுக்கு உயர்ந்து முதல்வர் ஆனதற்கும், சிவாஜி அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாமல் போனதற்கும் காரணம் இதுதான் என்றால் நம்புவீர்களா?…
ஆக்ஷன் படங்கள்தான் மூலமாகத்தான் ஒரு ஹீரோவின் இமேஜ் ரசிகர்கள் மத்தியில் உயரும். உயரும் எனில் இவர் பிரச்சனைகளை தட்டிக் கேட்பார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். அதனால்தான் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜயகாந்த் ஆகியோர் அந்த ரூட்டை பிடித்தனர்.
அதேநேரம் திரையில் நடிகர்கள் அசத்தலான சண்டை காட்சிகளில் ஈடுபடுவதற்கு பின்னால் சண்டை இயக்குனர்கள் இருப்பதை ரசிகர்கள் யோசிப்பதில்லை. ஒரு ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் சண்டை காட்சி நடிகர்கள் மூலமாகவே அந்த ஹீரோ அங்கே பில்டப் செய்யப்படுகிறார். இது இப்போதுள்ள அஜித், விஜய் உள்ளிட்ட எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். உண்மையில் இவர்கள் ரீல் ஹீரோக்கள் மட்டுமே. ரியல் ஹீரோக்கள் ஸ்டண்ட் நடிகர்கள்தான்.
இதில் ஜெய்சங்கர் காலம் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜுன், பிரபு என பலருக்கும் சண்டை காட்சிகளை அமைத்தவர் ஜூடோ ராமு. ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் இவர்தான். முரட்டுக்காளை படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சியை அமைத்தவர் இவர்தான்.
அந்த சண்டை காட்சியில் இவரின் மகன் ராமு ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்தது தனிக்கதை. ரஜினிக்கு 46 படங்களில் சண்டை காட்சி அமைத்துள்ளார். அவர் மூலமாகத்தான் ஆக்ஷன் ஹீரோ இமேஜ் ரஜினிக்கு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் ஜூடோ எனும் சண்டைக்கலையை அறிமுகப்படுத்தியர் இவர்தான். குத்துச்சண்டை, ஜூடோ, கராத்தே, சிலம்பம் என 60களிலிந்து 90கள் வரை ஹீரோக்கள் செய்த சண்டை காட்சிகளுக்கு பின்னால் இருப்பவர் இவர்தான்.
கமலுக்கு தூங்கதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன், பேர் சொல்லும் பிள்ளை, பாக்கியராஜுக்கு முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா உள்ளிட்ட பல படங்கள், விஜயகாந்த், அர்ஜூன் என இவரின் பட்டியள் நீள்கிறது.
தமில் சினிமா மட்டுமில்லாமல் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாருக்கு 52 படங்கள் செய்து அவரை ஜேம்ஸ்பாண்ட் போல் ஆக்கியவர் இவர்தான். தமிழ் சினிமா ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த பல துப்பறியும் படங்களுக்கு இவர்தான் சண்டைக்காட்சி. சண்டை காட்சிகளுக்கு பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சண்டைக்காட்சி அமைத்த சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார், விக்கி, ராஜா போன்றவர்கள் இவரின் உதவியாளர்கள்தான்.
தற்போது அவருக்கு 92 வயதாகிறது. இவரின் மனைவி இறந்துவிட. குடியாத்தத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள். அவ்வப்போது அவர்களின் வீட்டுக்கு சென்று வருகிறார்.
தமிழ் சினிமா ஆக்ஷன் படங்களில் ஜீடோ ரத்தினத்துக்கு பெரும் பங்குண்டு…
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…