அட இவர் தான் இனி ஜூனியர் கேப்டனாம்...! விஜயகாந்துக்கும் இவருக்கும் அப்படி என்ன சம்பந்தம்....?
தமிழ் சினிமாவில் கேப்டனாக என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றி கொடி நாட்டியுள்ளார் நம்ம கேப்டன். மேலும் மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவராகவும் திகழ்கிறார்.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இவரைப் பற்றி புகழைப் பாடாதவர்களே இருக்க மாட்டார்கள். விஜயகாந்த், ரஜினி, கமல் காலத்தில் அதிக ரசிகர்களை கொண்டவராக விஜயகாந்த் இருந்தார். அந்த அளவுக்கு ரசிகர்கள் தான் அவரின் மூச்சாக இருந்தார்.
இப்படி பட்ட கேப்டன் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு ஜுனியர் கேப்டன் இனி இவர் தான் என்று நடிகர் சின்னி ஜெயந்த் கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை. நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வாவை தான் ஜூனியர் கேப்டன் என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்கள் : பாட்டெல்லாம் செம ஹிட்…! க்ளைமாக்ஸில் மண்ணைக் கவ்விய அஜித் படம்…! இப்ப வரைக்கும் புலம்பும் தயாரிப்பாளர்…
ஏனெனில் அதர்வாவுடன் சின்னி ஜெயந்த் ஒரு படம் இணைந்து நடிக்க படம் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் அர்ஜூன் இவர்களின் சண்டை காட்சிகள் பார்ப்பதற்கு எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். அவர்களை அடுத்து அந்த மாதிரி மனோபக்குவத்தை நான் அதர்வாவிடம் தான் பார்க்கிறேன் என்றும் வேண்டுமென்றால் பாருங்கள் இந்த படம் வெளியானதுக்கு அப்புறம் அதர்வாவை அனைவரும் ஜூனியர் கேப்டன் என்று தான் அழைக்கப்போகிறார்கள் என கூறினார்.