ஜூனியர் சிவாஜியாக இருக்க வேண்டியவரு.. பிக்பாஸ் சிவக்குமாரின் அறியாத பக்கங்கள்
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிவகுமார் வெளியேறி இருக்கிறார். அதற்கு முன்னதாக அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது அனைவரும் மத்தியில் கண்ணீர் வர வைத்தது. யார் இந்த சிவகுமார்? எந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் விளக்கமாக கூறியிருக்கிறார்.
இவர் சிங்கக்குட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த படத்தை தயாரித்தது பிரபல நடிகை ஸ்ரீபிரியா. ஸ்ரீ பிரியாவின் சொந்த அக்காவின் மகன் தான் இந்த சிவக்குமார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவரை ஜூனியர் சிவாஜி என்று தான் ஸ்ரீபிரியா அறிமுகப்படுத்தி வைத்தாராம். ஜூனியர் சிவாஜி என்று சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அமரன் வெற்றியால் ஆட்டம் போடும் எஸ்கே!.. ஓவர் தலைக்கனமா?.. வெளுத்து வாங்கிய பிரபலம்!..
அதன் பிறகு தான் தெரிந்தது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் காதலிக்கு பிறந்த மகன் தான் இந்த சிவக்குமார் என்று. எந்த ஒரு அங்கீகாரமும் கொடுக்காமல் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணை காதலித்து குழந்தை மட்டும் பெத்தெடுத்து இருக்கிறார் ராம்குமார். இதை சிவக்குமார் எந்த ஒரு இடத்திலும் வெளிப்படையாக சொன்னதில்லை .
ராம்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மனைவியும் இருக்கிறார் .அதுபோக ஸ்ரீ பிரியாவின் அக்காவுடன் பழக்கம் ஏற்பட்டு அதன் மூலம் குழந்தையும் பிறந்திருக்கிறது .ஆனால் இருவரும் அதன் பிறகு சேர்ந்து வாழவே இல்லையாம். அதற்குள் என்ன பிரச்சனை நடந்தது என இதுவரை யாருக்கும் தெரியாது. ஏற்கனவே அந்த காலத்தில் பிரபு ஒரு பிரபல நடிகையை காதலித்தார் என தெரிந்ததும் சிவாஜி கோபப்பட்ட விஷயம் எல்லாம் அனைவருக்கும் தெரியும்.
அதைப்போல ராம்குமாரும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என தெரிந்ததும் சிவாஜியின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும் என யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது சிவக்குமார் ஸ்ரீபிரியாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறாராம் .சிவகுமார் சுஜாவருணி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… ரோகிணி மீது வலுக்கும் சந்தேகம்… செந்தில் எடுத்த திடீர் முடிவு!..
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் ராம்குமாரின் மகன் என்னும்போது சிவாஜியின் சொத்தில் இவருக்கு பங்கு இருக்கிறதா என்று பார்த்தால் கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் சிவகுமாருக்கு என எந்த ஒரு அடையாளமும் இல்லை .அங்கீகாரமும் இல்லை. முறையாக திருமணம் செய்து இவர் பிறந்திருந்தால் சிவாஜியின் சொத்தில் பங்கு கிடைத்திருக்கும் .
ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் இவருக்கு சிவாஜி வீட்டில் இருந்து எந்த ஒரு சொத்தும் கிடையாது. ஏற்கனவே சிவக்குமார் இப்போது கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார் .ஒருவேளை ஸ்ரீபிரியாவின் முயற்சியால் சிவாஜி வீட்டில் இருந்து ஏதாவது சொத்து வாங்க அவர் முயற்சிக்கலாம் .ஏனெனில் ஒரு பக்கம் தன் அக்காவின் மகன் எனும்போது தன் அக்காவுக்காக சிவாஜி என்று கூட பார்க்காமல் ஸ்ரீபிரியா ஏதாவது முயற்சி செய்யலாம் என சபிதா ஜோசப் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.