Connect with us
jothi

Cinema News

கமலோட அந்த சீனா? என்னால முடியாது – ஜோதிகாவையும் விடலயா? அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Actreee Jyothika: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித், விஜய், கமல் , விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் நடித்த பெருமைக்குரிய நடிகையாகவும் இருந்தார்.

நடிகர் சூர்யாவை  காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டார். அதன் பிறகு இரு குழந்தைகள் ஆன நிலையில் மறுபடியும் தன் கெரியரை ஆரம்பித்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்துவிட்டார் ஜோதிகா.

இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பு சிவாஜியிடம் சொல்ல முடியாமல் தவித்த பத்மினி… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. மம்மூட்டியுடன் மலையாளத்தில் வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு பேட்டி வைரலாகின்றது. அதாவது நடிக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டு நடித்த காட்சி எது? எந்தப் படம் என கேட்கப்பட்டது. அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் பளீர்னு பதில் சொன்ன ஜோதிகா வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை கூறினார்.

இதையும் படிங்க: இடுப்பழகை பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. மூடாம காட்டி இம்சை பண்ணும் மிர்ணா….

அந்தப் படத்தில் கமலிடம் தன் காதலை வெளிப்படுத்தும் அந்தக் காட்சிதான் என கூறினார். அந்த சீன் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அப்போது மணி அதிகாலை 3 இருக்குமாம். காதலை தெரிவிக்கும் போது அழுது கொண்டே நடிங்கள் என கௌதம் கூறினார்.

அதற்கு ஜோதிகா அதிகாலை 3 மணிக்கு எனக்கு அழுகையெல்லாம் வராது என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அந்த சீன் கஷ்டப்பட்டு  நடித்ததாக கூறினார். ஆனால் இப்பொழுது குடும்பம், குழந்தைகள் என ஆனபிறகு நடிப்புடன் என்னை எளிதாக இணைத்துக் கொள்ள முடிகிறது என்றும் இமோஷன் காட்சிகள் எல்லாம் சரளமாக நடிக்க முடிகிறது என்றும்  கூறினார்.

இதையும் படிங்க: கேரியரைப் பற்றிக் கவலைப்படாமல் 23 வயதிலேயே அப்படி நடித்த ஸ்ரீவித்யா… இதுக்கெல்லாம் ரொம்ப துணிச்சல் வேணும்…!

google news
Continue Reading

More in Cinema News

To Top