Actress Jyothika: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்து போகலாம். ஆனால் ஒரு சில நடிகைகளை தவிர மனதில் யாரையும் நிறுத்தி வைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சில நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ஜோதிகா. 2000 களில் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்தவர் ஜோதிகா.
அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த ஜோதிகா சூர்யாவை காதலித்து காத்திருந்து பின் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சிறிது காலம் நடிக்கவே இல்லை.
இதையும் படிங்க: என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..
அதற்கு காரணம் சிவக்குமார்தான் என்றும் இவர்கள் திருமணத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சிவக்குமார் சிவப்புக் கொடி காட்டி வந்ததாகவும் ஜோதிகாவிற்கும் சிவக்குமாருக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வருவதாகவும் அதனாலேயே அவர் மும்பையில் செட்டிலாகி விட்டதாகவும் ஏகப்பட்ட செய்திகள் வந்தன.
இந்த நிலையில் ஜோதிகா அளித்த ஒரு பேட்டியில் எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது கடைசியாக ஜோதிகா மலையாள படமான காதல் தி கோர் என்ற படத்தில் நடித்தார். அதற்கு முழு சப்போர்ட் செய்தவர் சிவக்குமார் என ஜோதிகா கூறினார்,
இதையும் படிங்க: பழம்பெரும் நடிகரின் குடும்ப வாரிசு! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி
அதுமட்டுமில்லாமல் எல்லாரையும் விட சிவக்குமார்தான் எனக்கு பக்க பலமாக இருக்கிறார் என்றும் சூட்டிங் போனால் வீடு, குழந்தைகள் என எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என அறிவுரைகளும் கொடுப்பாராம். ஜோதிகா நடிக்கும் படங்களின் இயக்குனர்களை அழைத்து சிவக்குமார் பேசுவாராம். அவர் நடித்த படங்களை குறிப்பிட்டு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்வாராம். இதை கண்டிப்பாக நான் தெளிய வைக்க வேண்டும் என ஜோதிகா சிவக்குமாரை பற்றி பெருமையாக கூறினார்.
இதையும் படிங்க: ரஜினி சொல்லியும் கேட்கல!.. மொத்த சீனையும் மாத்திய மகேந்திரன்!.. ஜானி படத்தில் நடந்த சம்பவம்.!..
