பாதியிலேயே நின்ற கௌதம் மேனன் படம்… கைக்கொடுத்து தூக்கிவிட்ட ஜோதிகா… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

by Arun Prasad |   ( Updated:2023-04-02 07:48:12  )
Jyothika and GVM
X

Jyothika and GVM

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கௌதம் வாசுதேவ் மேனனை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. எப்போதும் அவரது திரைப்படங்களுக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கும் கௌதம் மேனன், மிகவும் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் திரைக்கதை அமைப்பதில் நேர்த்தியானவராக திகழ்ந்து வந்தவர். குறிப்பாக அவரது திரைப்படங்களில் இடம்பெறும் காதல் காட்சிகள் கவித்துவமாக இருக்கும். எனினும் வாய்ஸ் ஓவருக்காக அவரை கேலி செய்பவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

சமீப காலமாக ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் கௌதம் மேனன். இரண்டு நாட்களுக்கு முன் வெளியான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்தில் காவல்துறை அதிகாரியாக மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கி மாபெரும் ஹிட் அடித்த “காக்க காக்க” திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பண உதவி செய்த சூர்யா-ஜோதிகா

“காக்க காக்க” திரைப்படத்தில் முதலில் ஒப்பந்தமானது ஜோதிகாதான். கௌதம் மேனன் கதாநாயகனுக்கான தேடலில் இருந்தபோது “சூர்யாவை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம்” என்று இயக்குனருக்கு யோசனை கூறியதே ஜோதிகாதானாம். அதற்கு முன் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து இரண்டு திரைப்படங்களே நடித்திருந்தனர். “காக்க காக்க” திரைப்படத்தில் இருந்துதான் சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

“காக்க காக்க” திரைப்படம் First Copy Basis-ல் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தின் பல காட்சிகள் படமாக்கி முடித்திருந்தாலும் சில காட்சிகள் மிச்சம் இருந்ததாம். ஆனால் கையில் பணம் இல்லையாம். கிட்டத்தட்ட 20 லட்சம் தேவைப்பட்டாதாம். அப்போது ஜோதிகா தனது 3 லட்சத்தை கௌதம் மேனனிடம் கொடுத்திருக்கிறார். அதே போல் சூர்யாவும் சில லட்சங்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் அத்திரைப்படத்தை கௌதம் மேனன் முழுமையாக முடித்தாராம்.

Next Story