Connect with us
surya

Cinema News

பொண்டாட்டி திட்டுவா வீட்டுக்கு போனும்! ‘கங்குவா’ பட தாமதமாவதற்கு ஜோதிகாதான் காரணமா?

Ganguva Movie: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதன் காரணமாகத்தான் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கிறார் சூர்யா.

ஒரு பக்கம் ஜோதிகா அவருடைய படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இன்னொரு பக்கம் சூர்யா பாலிவுட் கோலிவுட் என தன்னுடைய கெரியரை மிகவும் பிசியாக வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா.

இதையும் படிங்க: கொளுந்துவிட்டு எரியும் த்ரிஷா பிரச்சினை.. விஜயோட டேக்டிக்ஸ்தான் அந்த புகைப்படம்! அப்போ உண்மையா?

கிட்டதட்ட 2 1/2 வருடமாக இந்த படம் ப்ரடக்ஷன்லேயே இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் இந்த படத்தின் அப்டேட் பற்றி எதுவுமே வெளியாகவில்லை. இதனால் கோபமடைந்த சூர்யா ரசிகர்கள் ஒரு பெரிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மாதிரி இந்த படத்திற்கு எதிராக போஸ்டரை ஒட்டி இருந்தனர். படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் ஏன் படத்தை எடுக்கிறீர்கள் என்ற வாசகத்தையும் அந்த போஸ்டரில் எழுதி வைரல் ஆக்கி வந்தனர்.

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் கங்குவா திரைப்படம் தாமதமாவதற்கு என்ன காரணம் என்பதை கூறி இருக்கிறார் .கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு ஞானவேல் ராஜாவோ இல்லை தயாரிப்பாளர் தனஞ்செயனோ காரணம் இல்லை. அந்த படத்தில் நடித்த சூர்யா தான் காரணம் என கூறினார்.

இதையும் படிங்க: வாங்கிய அட்வான்ஸை விட்டெறிந்த ஸ்ரீகாந்த்! மணிரத்னம் சொன்ன ஒரு வார்த்தை.. இன்று வரை தொடரும் மோதல்

ஏனெனில் தற்போது சூர்யா மும்பையில் வசித்து வருவதால் கங்குவா திரைப்படத்திற்காக சென்னைக்கும் மும்பைக்கும் அவர் வந்து வந்து போய்க்கொண்டிருந்தார். அதனால் ஒரு மாதத்திற்கு 10 நாட்கள் வீதம் கால்ஷீட் கொடுத்து இருந்தாராம். இதற்கு பின்னணியில் ஜோதிகா போட்ட கண்டிஷன் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஜோதிகாவும் படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் படங்களில் நடிக்கும் போது சூர்யா வீட்டில் இருக்க வேண்டுமாம், சூர்யா படங்களில் நடிக்கும் போது ஜோதிகா வீட்டில் இருக்க வேண்டுமாம். இப்படி ஒரு கண்டிஷனில் தான் இவர்கள் குடும்பமும் போய்க் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகத்தான் கங்குவா திரைப்படத்தில் இயக்குனர் சொன்ன தேதியில் சூர்யாவால் கலந்து கொள்ள முடியவில்லை என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க: ஆபாசமாக ஓடிவந்த நயன்தாரா!.. ஆடிப்போன இயக்குனர்!.. சூர்யா படத்தில் நடந்தது கூத்து!..

google news
Continue Reading

More in Cinema News

To Top