முழு பூசணியை சோத்துல மறைக்கிற கதைதான் இது.. ஜோதிகா விஷயத்தில் கேம் ஆடிய கார்த்திக் சுப்பராஜ்

by Rohini |   ( Updated:2025-05-05 07:48:32  )
jyothika
X

jyothika

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் ரெட்ரோ. இந்த படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை. அதனால் இந்த தடவையும் சூர்யா பல்பு வாங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமீப காலமாக அவருக்கு எதிராக பல்வேறு வகையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பெரிய அளவில் சூர்யாவின் புகைப்படத்தை வைத்து ட்ரோலும் செய்து வருகின்றனர்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படத்திலிருந்து இந்த மாதிரி ஒரு பிரச்சனையை சூர்யா எதிர் கொண்டு வருகிறார். இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். சூர்யாவுக்கு எதிராக வலதுசாரிகள் எதிர் வினையான கருத்துக்களை பரவி வருகின்றனர். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் மெட்ரோ படத்தில் ஜோதிகாவின் தலையீடு என்பதே இல்லை என சூட்சகமாக கூறியிருந்தார்.

இதைப் பற்றி பிஸ்மி கூறும் பொழுது ரெட்ரோ படத்திற்கு அவர் தலையீடு இல்லை என்று சொல்லவே முடியாது. ஏனெனில் இந்த படத்தை தயாரித்ததே கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் சூர்யா ஜோதிகாவின் 2d நிறுவனமும் தான் அப்படி இருக்கும் பொழுது ஜோதிகாவுக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

#image_title

கார்த்திக் சுப்புராஜ் இப்படி சொல்கிறார் என்றால் ஜோதிகாவின் சமீப கால கருத்து சூர்யாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதித்து வருகிறது. ஜோதிகாவுக்கும் எதிராக பல நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதனால் இது ரெட்ரோ படத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக கூட கார்த்திக் சுப்புராஜ் இப்படி சொல்லி இருக்கலாம் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

Next Story