முன்னணி இயக்குநர்கள் என சொல்பவர்கள் அனைவருமே ஹீரோ பின்னாடி மட்டுமே ஓடுகின்றனர். ஹீரோயின்களை மனதில் வைத்து எந்தவொரு நல்ல கதையையும் யோசித்து தரமாக இயக்க முன் வர மாட்டேங்கிறாங்க என நடிகை ஜோதிகா செம போல்டாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
பெரிய பட்ஜெட்டில் ஹீரோக்களை லீடு ஹீரோவாக வைத்து இயக்கும் படங்கள் மட்டுமே கதை நல்லா இல்லை என்றாலும் ஓடுகின்றன.
இதையும் படிங்க: சின்ன பையன் மாதிரி மாறிட்டாரே சிவகார்த்திகேயன்!.. வெள்ள நிவாரணத்துக்கு இத்தனை லட்சம் கொடுத்துட்டாரே!..
ஆனால், ஹீரோயின்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் நல்ல கதைகளை யோசித்து படம் இயக்க வேண்டும். நயன்தாராவுக்கு ஒரு அறம் மற்றும் கோலமாவு கோகிலா அமைந்தது போல மற்ற நடிகைகளுக்கும் நல்ல கதைகள் அமைய வேண்டும்.
ஹீரோவை வைத்து தான் சினிமா பிசினஸே நடைபெற்று வரும் நிலையில், நயன்தாராவை வைத்து ஹிட் அடித்த நெல்சனே அதன் பின்னர் சிவகார்த்திகேயன், விஜய், ரஜினிகாந்த் என ஹீரோ பின்னாடி தான் ஓட ஆரம்பித்து விட்டார். பெண் இயக்குநர்களான சுதா கொங்கரா உள்ளிட்ட சிலரும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களை இயக்கத்தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: யாரு டைட்டில் வின்னருன்னு ஆரி அர்ஜுனன்னுக்கும் தெரிஞ்சிடுச்சோ!.. அந்த ட்வீட்டை டெலிட் பண்ணிருக்காரே?..
மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து ஓரினச்சேர்க்கையாளர் கதையில் உருவான காதல் படத்தில் நடித்த நடிகை ஜோதிகா தமிழிலும் அதுபோன்ற போல்டான கதைகள் வரவேண்டும் என்றும் உமன் சென்ட்ரிக் படங்கள் சமீப காலமாக உப்புமா படங்கள் போல வராமல் முன்னணி இயக்குநர்கள் படங்களை போல தரமாக வந்தால் நடிகைகளின் ஒட்டுமொத்த நடிப்பும் வெளிவரும் என ஜோதிகா பேசியுள்ளார்.
அடுத்து இந்தியில் மாதவன் உடன் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வரும் நிலையில், தமிழில் யாருடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக தளபதி 68 படத்தில் ஜோதிகாவை நடிக்க வெங்கட் பிரபு கேட்டு அவர் ஓகே சொல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகின.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…