Cinema News
இப்படியெல்லாம் மாமனார் வீட்ல இருக்க முடியுமா ? மும்பையில் படு ஜாலியா சுத்தும் ஜோதிகா
Jyothika: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக ஒரு டாப் நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. தமிழில் வாலி திரைப்படத்தின் மூலம் ஒரு துணை நடிகையாக அறிமுகமான ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஹீரோயினாக தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்தார். முதல் படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஜோதிகா அந்த படத்தில் இருந்து இருவருக்கும் ஆன நட்பு ஆரம்பமானது.
ஆறு படங்கள்: சூர்யாவுடன் இணைந்து கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்திருக்கிறார் ஜோதிகா. காக்க காக்க படத்தில் தான் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். அதிலிருந்து அவர்களின் காதல் மலர ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .இவர்கள் திருமணத்திற்கு முதலில் சூர்யாவின் தந்தை சிவக்குமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.\
இதையும் படிங்க: அந்த பொண்ணு கொடுத்து வச்சவங்களா?!.. குஷ்பூ தன் மகளை கட்டிக் கொடுப்பாரா!… பொங்கிய பிரபலம்!…
அதனால் சிவகுமாரின் சம்மதத்திற்காக கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் சூர்யாவும் ஜோதிகாவும் காத்திருந்தனர். அதன் பிறகு சிவகுமாரை சம்மதிக்க வைத்து இருவரின் பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் கைகூடியது. திருமணத்திற்கு பிறகு ஒரு கூட்டு குடும்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க சில ஆண்டுகள் ஜோதிகா படங்களில் நடிக்காமல் இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு: அதன் பிறகு குழந்தைகள் பெரியாளானதும் அவருடைய நடிப்பை தொடர்ந்தார். அதுவும் பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஜோதிகா. அதில் முக்கியமாக கருதப்படுவது ராட்சசி, 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற படங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் திடீரென சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படிங்க: தனுஷ் திருமணத்தில் இத ஏன் காட்டல?!.. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு!.. இப்படி பொங்கிட்டாரே!..
அப்பொழுது கூட சிவகுமாருக்கும் ஜோதிகாவிற்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு என்பது போல செய்திகள் பரப்பப்பட்டது. ஆனால் பாலிவுட்டிலும் தன்னுடைய கெரியரை நிலைநிறுத்தவே இருவரும் மும்பையில் செட்டில் ஆனதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது. அதில் மிகவும் மாடர்னாக ஒரு மும்பை நடிகையாகவே காட்சியளிக்கிறார் ஜோதிகா. அதை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் மாமனார் வீட்டில் இருக்க முடியுமா என கமெண்ட்களை கூறி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DCThAh7xSue/?igsh=eXl4djIzanQ4aXdr