Jyothika: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. ஜோதிகா கிட்டத்தட்ட 10 வருட காலம் சினிமாவை ஆட்டிப்படைத்து வந்தார். அவர் இருக்கும் காலத்தில் யாருமே கிட்ட நெருங்க முடியவில்லை.
அந்தளவுக்கு ஒரு பிஸியான நடிகையாக இருந்து வந்தார் ஜோதிகா. அவரின் முதல் படம் அஜித்தின் வாலி படம்தான். ஆனால் அதற்கு முன்பே ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தார் ஜோதிகா. அது தமிழில் ரிலீஸான காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமேக்தான்.
இதையும் படிங்க: ‘ரமணா’ படத்துல இத மறைச்சுதான் கேப்டனிடம் கதை சொன்னேன்! ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்த தகவல்
ஆனால் ஹிந்தியில் அந்தப் படம் அட்டர் ஃப்ளாப். வாலி படத்திற்கு பிறகு ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார்.ஆனால் பூவெல்லாம் கேட்டுப்பார் படம்தான் ஜோதிகா நடித்த முதல் படம். ஆனால் ரிலீஸான முதல் படமாக வாலி அமைந்தது.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக சூர்யா நடித்தார். அது சூர்யாவிற்கு இரண்டாவது படம். ஆகவே இரண்டு பேரும் சினிமாவிற்கு புதிது என்பதால் ஏகப்பட்ட டேக்குகள் எடுப்பார்களாம். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இயக்குனர் வசந்த்.
இதையும் படிங்க:தனுஷ் குடும்பத்திற்கு இவ்ளோ விஷயம் செய்துள்ளாரா விஜயகாந்த்? இதுவரை வெளிவராத தகவல்..
அதனால் கடுப்பாகி வசந்த் சூர்யாவை கடுமையாக திட்டிக் கொண்டே இருப்பாராம். அதே மாதிரி ஜோதிகாவையும் கடுமையாக திட்டுவாராம் வசந்த். இதனால் கோபமாகி ஜோதிகா ஒரு மூலையில் போய் அழுது கொண்டு உட்கார்ந்து விடுவாராம்.
அதற்கு அவர் அம்மா என் பொண்ணு சங்கர் படத்தில் நடிச்சிருக்கு. அவ்ளோ பெரிய டைரக்டரே அவளை திட்டியதில்லை என நக்மாவை பற்றி சொல்லி நீங்கள் இப்படி திட்டுகிறீர்களே என்று கேட்பாராம். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்கிற வரைக்கும் அழுது கொண்டே தான் நடித்தாராம் ஜோதிகா.
இதையும் படிங்க: இதுக்கு எதுக்குமா புடவ கட்டுற?!.. யாஷிகா ஆனந்த் செஞ்ச வேலைய பாருங்க!..
