தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் என்றால் தற்போது விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியவர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். இவர் படங்கள் கூறிய கருத்துக்கள் அந்த காலத்திலேயே முற்போக்குத்தனமான தனது கருத்துக்களை தனது திரைப்படங்களும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தைரியமாக படம் எடுத்துவிடுவார் கே.பி.
அதே போல் இவரது திரைப்படம் வெளியாகும்போது அது இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு என்று மற்ற மொழி திரைப்படங்களையும் இயக்கி அந்தந்த மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்து உள்ளார்.
அப்படி இவர் இயக்கத்தில் தெலுங்கில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மரோ சரித்ரா. இந்த திரைப்படத்தில் கே.பாலச்சந்தருக்கு உதவி இயக்குனராக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அந்த படம் பற்றி அண்மையில் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
அதாவது மரோ சரித்ரா திரைப்படத்தில் இறுதிக்காட்சியில் ஹீரோயினை ரேப் செய்து, பின்னர் அவர் இறந்து விடுவது போல் காண்பிக்கப்பட்டு இருக்குமாம். ஆனால், உண்மையில் அப்படி எடுக்கப்படவில்லையாம். ஹீரோயின் வெறுமனே இறந்து விடுவது போல தான் எடுத்து இருந்தாராம் கே.பாலச்சந்தர்.
பின்னர் படத்தை முழுதாக பார்த்து அவர் இந்த இறுதிக் காட்சியில் ஹீரோயின் ரேப் செய்துதான் இருந்துவிட வேண்டும். அப்போது தான் படம் உயிரோட்டமாக இருக்கும் என்று அவர் தீர்மானித்தாராம்.
ஆனால், அந்த காட்சி எடுக்க வேண்டுமானால் மீண்டும் ஷூட்டிங் செய்த அதே இடத்திற்கு செல்ல வேண்டும். ஹீரோயினை அழைக்கவேண்டும். அவரது கால்ஷீட் வாங்க வேண்டும் என்று சில தடங்கல்கள் ஏற்பட்டு உள்ளன.
இதையும் படியுங்களேன் – ஏமாற்றி தான் இந்த வாய்ப்பை வாங்குனேன்.! சிவகார்த்திகேயனின் இந்த செயலால் என்ன நடந்தது தெரியுமா.?!
ஆனால், இதனை கண்டறிந்த கே.பாலச்சந்தர் நேராக எடிட்டர் ரூமிற்கு சென்று ஹீரோயின் ரேப் செய்யப்பட்டு பின்னர் இறந்து விடுவது போன்ற காட்சியை எப்படியோ வெட்டி ஒட்டி சேர்த்து விட்டாராம். இறுதியில் அவர் எதிர்பார்த்தது போலவே ஷூட்டிங் எடுக்காமலே ஹீரோயின் ரேப் செய்யப்பட்டு இறந்து விடுவது போலவும் காட்டப்பட்டு விட்டதாம்.
அதன் காரணமாகவே படத்தின் மீது பெரிய தாக்கம் ஏற்பட்டு, படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். இதனை அண்மையில் கே பாலச்சந்தரின் உதவி இயக்குனர்களின் ஒருவரும், பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இயக்கிய இயக்குனருமான சுரேஷ்கிருஷ்ணா அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மாநகரம், கைதி,…
ஆர்.ஜே பாலாஜியின்…
Actress trisha:…
Vetrivasanth: சின்னத்திரையில்…
அமரன் திரைப்படத்தின்…