More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜியை பார்த்து மிரண்டுப்போன பிரபல இயக்குனர்.. எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகமான சுவாரஸ்ய சம்பவம்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புக்கே பல்கலைக்கழகமாக திகழ்பவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். பராசக்தியில் தொடங்கிய இந்த நடிப்பு புயல் படையப்பா வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் அடித்து வந்தது. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது உலக சினிமாவிலேயே சிவாஜியை ஓவர் டேக் செய்த நடிகர் ஒருவர் கூட இல்லை என பலரும் கூறுவார்கள்.

Sivaji Ganesan

ஒரு பக்கம் நடிப்பில் சிவாஜி கணேசன் பிண்ணி பெடலெடுத்துக்கொண்டிருந்தார் என்றால் மறு பக்கம் மாஸ் என்ற வார்த்தைக்கு அகராதியாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். தமிழ் மக்களில் கோடானு கோடி ரசிகர்களை தனது வசீகரத்தால் மயக்கி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.

Advertising
Advertising

MGR

இவ்வாறு அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் வாழ்க்கையில் இருவரும் எப்படிப்பட்ட முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்ததுள்ளது.

K Balachander

அதாவது கே.பாலச்சந்தர் முதன் முதலில் “தெய்வத் தாய்” என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்தான் கதாநாயகன். அதாவது எம்.ஜி.ஆர்தான் தனது திரைப்படத்திற்கு வசனம் எழுத கே.பாலச்சந்தருக்கு வாய்ப்பு வழங்கினார்.

அவருக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆர் வாய்ப்பளித்திருந்தாலும் கே.பாலச்சந்தர் பார்த்த முதல் படப்பிடிப்பு எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தெரியுமா?

இதையும் படிங்க: வாரிசு படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் முழுக்க முழுக்க பொய்… விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…

Parasakthi

சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் திரைப்படமான “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்புத்தான் முதன்முதலில் கே.பாலச்சந்தர் பார்த்த படப்பிடிப்பு ஆகும். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அந்த திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சு, வசனம் எழுதிய கலைஞர் மற்றும் அதில் நடித்த சிவாஜி கணேசன் ஆகியோரை முதன்முதலில் நேரில் பார்த்தபோது கே.பாலச்சந்தர் மிகுந்த வியப்படைந்தாராம்.

Published by
Arun Prasad

Recent Posts