தமிழ்த்திரை உலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படுபவர் K.பாக்கியராஜ். இவரது படங்களில் முந்தானை முடிச்சு படத்திற்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. காரணம் படத்தின் திரைக்கதை தான். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் என்றால் மிகையில்லை.
இந்தப் படம் எவ்வளவு சாதனைகளைப் படைத்தது என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
வசூலைப் பொருத்தவரை புதிய பல சாதனைகளை செய்த படமாக அமைந்தது தான் முந்தானை முடிச்சு. 49 திரையரங்குகளில் வெளியான அந்தப் படம் 43 திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்தும் 12 திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் கண்ட படம் தான் முந்தானை முடிச்சு.
சென்னையில் மட்டும் 4 திரையரங்குகளில் வெள்ளி விழா. 30 லட்சம் செலவில் உருவான இந்தப் படம் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
என்னுடைய நண்பர் ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ் தான் முந்தானை முடிச்சு படத்தின் சென்னை விநியோகஸ்தர். அவர் 50 நாள்களுக்கு மேல் அட்வான்ஸ் புக்கிங்லயே ஓடிய படம் தான் முந்தானை முடிச்சுன்னு சொன்னார். 260 நாள்களைக் கடந்து சென்னை அபிராமி திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ் சொன்னார்.
50 நாள்களுக்கு மேல அட்வான்ஸ் புக்கிங்லயே படம் ஓடியதால் இந்தப்படத்திற்கு போஸ்டர் ஒட்டவில்லை என்று அவர் சொன்னார். இதனால் அவர் மேல பாக்கியராஜிக்குக் கோபம். என்னுடைய படத்திற்குப் போஸ்டரே ஒட்ட மாட்டேங்கறீங்களேன்னு அவரிடம் சொன்னார்.
அட்வான்ஸ் புக்கிங்லயே படம் ஹவுஸ்புல்லா ஓடிக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது எதற்கு போஸ்டர் ஒட்டணும்? குறைஞ்சது 100 நாளுக்கு இந்தப் படத்துக்கு போஸ்டர் ஒட்ட மாட்டேன். அதுக்கு அப்புறம் எப்படி ஒட்டுறேன்னு பாருங்கன்னு சொன்னாராம் ஆனந்தா சுரேஷ்.
அதுக்கு அப்புறம் 90வது நாளில் இருந்து வெள்ளி விழா வரைக்கும் மிகப் பிரமாதமாக போஸ்டர் ஒட்டி வேலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…