ஹீரோவுக்கு செலவு பண்ணா புட்டுக்குவ.. சின்ன படங்கள் ஓடுவதுக்கான நேரம்! மாஸ் காட்டிய கே.ராஜன்

by Rohini |
rajan
X

rajan

கங்குவா படத்தின் எதிரொலி பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா.மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடுமையான விமர்சனங்களால் தோல்வியை சந்தித்து வருகிறது. எதிர்பார்த்த அளவு படம் இல்லை என்ற நெகட்டிவ் விமர்சனங்களே இதுவரை வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் லாரா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவிற்கு தயாரிப்பாளர் கே,ராஜன் வந்து தெறிக்கவிட்ட சம்பவம் தான் வைரலாகி வருகின்றது. அவர் இந்தியன் 2 , கங்குவா படத்தை மறைமுகமாக தாக்கியும் பேசியிருக்கிறார். இதோ அவர் கூறியது: கதை தான் முக்கியம். கதைக்கு என்ன செலவு பண்ணனுமோ அதை பண்ணனும்.

இதையும் படிங்க: விவாகரத்துக்கு காரணம்!… சாய்ரா பானுவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

ஹீரோவுக்கு செலவு பண்ணினா புட்டுக்குவ. கதை இல்லாமல் ஹீரோ ஹீரோயினுக்கு செலவு பண்ணினால் நீ காலி. அவங்க நல்லா இருப்பாங்க. ஏனெனில் அடுத்து நான்கு ஏமாளிங்க கதவை தட்ட போறாங்க. அந்த ஏமாளிங்க தயாரிப்பாளர்கள்தான். பல தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 300, 400 படங்கள் ரிலீஸ் பண்ண முடியாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

வியாபாரமும் இல்ல. தியேட்டர் கிடைக்கல. அவ்வளவு சிரமப்படுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த சூழ்நிலையில் கார்த்திக் என்ற இயக்குனர் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ‘ லாரா’ திரைப்படத்தை பிரமாதமா பண்ணி இருக்கீங்க. மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். இது நல்லா போகும். ஏனெனில் இப்பொழுது சின்ன படங்கள் ஓடுவதற்கான நேரம்.

rubber

rubber

இந்த வருஷம் பல சின்ன படங்கள் பெரிய படங்களாக மாறிவிட்டன. மக்கள் நல்ல கதை இருந்தால் போதும் உள்ளே போகிறார்கள். ஆரம்பத்தில் ஹீரோ ஹீரோயினுக்காக படம் பார்க்க போனவர்கள் ஏராளம். ஆனால் அதிலிருந்து இப்போது மக்கள் மாறி விட்டார்கள். இந்த ஒரு வருடத்தில் பல கோடிகளில் படம் எடுத்த படங்கள் காணாமல் போய்விட்டன.

இதையும் படிங்க: ஹீரோக்கு வேலையே இல்லையே… அட்லீ படத்தில் ஓவர் சீன் போட்டு ஓகே சொன்ன நயன்!..

அந்த தயாரிப்பாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்த பெரிய படங்களின் நஷ்டத்தால் தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடைகிறார்கள். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது .சின்ன படங்கள் பெரிய படங்கள் ஆகிவிட்டன. வாழை ,ரப்பர் பந்து போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன. இவ்வாறு கே.ராஜன் அந்த விழா மேடையில் பேசியிருக்கிறார்.

Next Story