பா.ரஞ்சித்துக்கும் மோகன்ஜிக்கும் போட்டி?… ஓப்பனாக போட்டுடைத்த சர்ச்சை தயாரிப்பாளர்…
பா.ரஞ்சித்-மோகன் ஜி
சமூகத்தில் நிகழும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு சம்மட்டி அடி அடிக்கும் வகையில் தனது திரைப்படங்களில் கதையம்சத்தை அமைக்கும் வழக்கம் கொண்டவர் பா.ரஞ்சித். ஆதலால் பா.ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் வரும் அதே வேளையில் பல விமர்சனங்களும் வருவது உண்டு.
அதே போல் ஒரு பக்கம் “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்”, “பகாசூரன்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய மோகன் ஜி மீதும் பல விமர்சனங்கள் உண்டு. மோகன் ஜி தனது திரைப்படங்களில் ஒடுக்கப்பட்டவர்களை தவறாக சித்தரிக்கிறார் என்றும் சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களை தூக்கிப்பிடிக்கிறார் என்றும் பலர் கூறுவதுண்டு.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் பா.ரஞ்சித் ஆதரவாளர்களுக்கும் மோகன் ஜி ஆதரவாளர்களுக்கும் பல விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும். சமீப காலமாக இந்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
ப.ரஞ்சித்துக்கும் மோகன்ஜிக்கும் போட்டி…
இந்த நிலையில் தனது சர்ச்சை கருத்துக்களால் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “ஒரு தயாரிப்பாளர் மோகன் ஜி, பா.ரஞ்சித்திற்கு எதிராகத்தான் படமெடுப்பார் என்று ஒரு விழாவில் வெளிப்படையாக கூறினார். இதுதானே சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கிறது?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கே.ராஜன், “பா.ரஞ்சித்திற்கும் மோகன் ஜிக்கும் சம்மந்தமே கிடையாது. பா.ரஞ்சித் அவரது சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதில் தவறில்லை. அவர் சமுதாயத்திற்கு நிறைய பாதிப்புக்கள் இருக்கிறது. அதே போல் மோகன்ஜியும் தனது சமுதாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை கோடிட்டு காட்டுகிறார்” என கூறிய அவர், “பா.ரஞ்சித்துக்கும் மோகன்ஜிக்கும் போட்டி என்ற கருத்தை நாம்தான் உருவாக்குகிறோம். அவரவர்கள் சமுதாயத்திற்குள் இருக்கும் குறைபாடுகளை கோடிட்டு காட்டுகிறார்கள்” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ச்சே… இந்த படத்தையா மிஸ் பண்ணோம்… பொது மேடையில் கவலைப்பட்ட அமீர்…