கேப்டன் செஞ்சத அஜித் செஞ்சாருனா? விஜயே காணாம போயிடுவாரு.. கே.ராஜன் பேட்டி

by Rohini |   ( Updated:2025-04-30 00:47:19  )
captain
X

captain

Ajith: இன்று தமிழ் சினிமாவில் மாபெரும் பில்லர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவருடைய படங்களுக்குத்தான் இப்போது வரை நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது. சமீபகாலமாக அஜித்தும் விஜயும் இந்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள்.அஜித் ஒரு பக்கம் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி தன்னை பற்றியே பேச வைத்துவிட்டார். அதே நேரம் விஜய் கட்சி கூட்டம் , மாநாடு என பரபரப்பாக்கினார். சினிமாவையும் தாண்டி பிற விஷயங்களிலும் இவர்கள்தான் இப்போது நம்பர் ஒன்னாக திகழ்ந்து வருகின்றனர்.

தொழில் முனையில் ஆரம்பத்தில் இருந்தே விஜயின் படங்களுக்கும் அஜித்தின் படங்களுக்கும்தான் போட்டி நிலவி வருகிறது. போட்டி இருந்தால்தான் ஓடிக் கொண்டே இருக்க முடியும். எதிரியாக நினைக்காமல் தனக்கு நிகர் ஒருத்தன் இருக்கிறான் என்று நினைத்து ஓடினாலே பாதி வெற்றியை அடைந்து விட முடியும். அப்படித்தான் விஜயும் அஜித்தும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டி இன்று இந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.

ஏன் விஜய் இப்போது அரசியலுக்கு போனதால் அஜித் அவருடன் நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும் வலைப்பேச்சு அந்தணன் கூறினார். அதாவது எனக்கு எதிராளி யாரும் இல்லை எனும் போது எப்படி என்னால் போட்டி போட முடியும் என்று சொல்லி வருத்தப்பட்டாராம் அஜித். ஆனால் உள்ளுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு விஜய் வாழ்த்து செய்தி அனுப்பினார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் விஜய் அஜித் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். விஜய் சமீபத்தில் கோவையில் ஒரு கூட்டத்தை கூட்டினார்.அதை போல் அஜித்தும் ஒரு கூட்டத்தை கூட்டினால் விஜயின் கூட்டல் காணாமல் போய்விடும். ஆனால் அஜித் அதை செய்ய மாட்டார்.

ரசிகர்களை சந்திக்கிறதே இல்லையே. அரசியல் வேண்டாம். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அஜித் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். ரசிகர்களை சந்திக்காத போதே வெறி கொண்டிருக்கின்றனர். இதே அஜித் அவர் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் வேறு மாதிரி இருக்கும்.

ரசிகர்களை சந்தித்து ஒருவேளை டிஃபன் போட வேண்டும். இப்படித்தான் விஜயகாந்த் செய்வார். ஞாயிற்றுக் கிழமைகளில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் விஜயகாந்த். பல ஊர்களில் காரில் புறப்பட்டு அவருடைய் ரசிகர்கள் இவரை பார்க்க வந்துவிடுவார்கள். டி. நகரில் உள்ள அவரது அலுவலகத்தில்தான் சந்திப்பு நடைபெறும். ஞாயிற்று கிழமை என்பதால் பிரியாணியுடன் சாப்பாடு இருக்கும்.

இப்படி இருந்ததனால்தான் இன்னும் விஜயகாந்தை மறக்காமல் இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். இப்படி அஜித் மட்டும் செய்தால் கோவையில் கூடிய கூட்டமே காணாமல் போய்விடும் என்று கே. ராஜன் கூறினார்.

Next Story